பாமகவிற்கு மாம்பழம் சின்னம் கிடையாது.. முடக்கிய தேர்தல் ஆணையம்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில்
டெல்லி: பாமகவில் தலைமை பிரச்சனை உருவாகி உள்ளது. அதனால் பாமகவிற்கு மாம்பழகம் சின்னம் ஒதுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் பாமகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை உள்ளது. பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி உள்ளார். இதனால் பாமகவினர் தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு தரப்பினர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். ஆனால் ராமதாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி ராமதாஸ் தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றது.
இந்நிலையில் பாமகவின் தலைவராக அன்புமணி ராமாதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. வரும் 2026 ஆகஸ்டு வரை பாமக வின் தலைவராக அன்புமணியே தொடர்வார் எனவும் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது ஒரு தலைபட்சமான அறிவிப்பு என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி பாமகவின் தலைவராக பதவி வகித்த அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது என்றும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛ராமதாஸ் தான் கட்சியை நிறுவினார். கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். போலி ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் தலைவராக அங்கீகரித்துள்ளது. இதனை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ‛‛கட்சியின் பொதுக்குழு அன்புமணி ராமதாஸை கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அன்புமணியை கட்சியின் தலைவராக அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது தான்'' என்று வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில், ‛‛பாமகவில் தற்போது தலைமை பிரச்சனை உள்ளது. இதனால் கட்சியின் சின்னமான மாம்பழத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது. அன்புமணி தரப்புக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ இந்த சின்னத்தை வழங்க முடியாது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும். இதனால் பாமகவிற்கு சின்னம் ஒதுக்க முடியாது'' என்று பதிலளிக்கப்பட்டது. இதன்மூலம் பாமகவின் மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருப்பது பாமகவினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications