டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இடைக்கால சார்ஜ் டி அஃபைர்ஸ் ஆக அதுல் கேஷாப் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்இடைக்கால சார்ஜ் டி அஃபைர்ஸ் ஆக அதுல் கேஷாப்பை நியமனம் செய்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.. இவர் ஏற்கனவே இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த தூதர் டேனியல் ஸ்மித், இடைக்கால சார்ஜ் டி அஃபைர்ஸ் ஆக இந்தியாவிற்கு நியமனம் செய்யப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களாக பொறுப்பில் இருந்த டேனியல் ஸ்மித் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த வெளிநாட்டு சேவையின் தொழில் உறுப்பினரான தூதர் அதுல் கேஷாப், இடைக்கால சார்ஜ் டி அஃபைர்ஸாக பணியாற்ற டெல்லிக்கு புறப்படவுள்ளார்.

Appointment of Ambassador Atul Keshap as Chargé d’Affaires at Embassy New Delhi

முன்னதாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தெற்காசியாவின் துணை உதவி செயலாளராக தூதர் கேஷப் பணியாற்றி உள்ளார். அவர் சமீபத்தில் கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பணியகத்தின் முதன்மை துணை உதவி செயலாளராகவும், இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார்.

தூதர் அதுல் கேஷாப்பின் நியமனம் COVID-19 தொற்றுநோய் போன்ற உலகளாவிய சவால்களை சமாளிக்க உதவும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நெருக்கமான தொடர்பை அதிகப்படுத்தவும் கேஷப்பின் நியமனம் உதவும் என்று அமெரிக்க அரசு தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+