கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழடி அகழாய்வின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னைக்கு இடமாறுதல் கேட்டிருந்த நிலையில் கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கீழடி அகழாய்வுகளை வெளிப்படுத்துவதில் முனைப்புடன் இருந்தவர் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. திடீரென அவரை அஸ்ஸாம் மாநிலத்துக்கு மத்திய தொல்லியல் துறை இடம் மாற்றம் செய்தது.

Archaeologist Amarnath Ramakrishna transfers to Goa

இதனைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே கீழடி அகழாய்வு முடிவுகள் வெளியாகி வைகை நதிக்கரையின் நகர நாகரீகத்தை உலகத்துக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

கீழடியில் அடுத்தடுத்து நடைபெறும் அகழாய்வுகளில் பங்கேற்கும் வகையில் தமக்கான பணி இடமாறுதல் பட்டியலில் சென்னை தொல்லியல் துறையை விருப்பமாக தேர்வு செய்து நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தாராம் அமர்நாத். 2-வது திரிச்சூர் மற்றும் 3-வதாக கோவாவை அவர் தேர்வு செய்திருந்தார்.

Archaeologist Amarnath Ramakrishna transfers to Goa

ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணாவை கோவாவுக்கு இடம் மாற்றம் செய்யும் பரிந்துரையை தொல்லியல் துறைக்கு தீர்ப்பாயம் அனுப்பியது. தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு கீழடி அகழாய்வு பணிகளுக்காக அஸ்ஸாமில் இருந்து தமிழகத்துக்கு அமர்நாத் ராமகிருஷ்ணாவை இடம் மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+