"புத்திசாலி" பிடிஆர்.. ஸ்டாலின் வைத்த "புள்ளியில்" ராகுல் போட்ட கோலம்.. வேருடன் அசைக்கும் பாஜக? பலே
டெல்லி: விரைவில் 5 மாநில தேர்தல்கள் வரவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் தேசிய கட்சிகள் இறங்கி உள்ளன.. இதில், பாஜக ஒருபடிமேல சென்று, மக்களை ஈர்க்கும்படியான, பல்வேறு வியூகங்களை கையில் எடுக்க துவங்கி உள்ளதாக தெரிகிறது.
இலவசங்கள் தேவையா? இல்லையா? என்பது குறித்து, கடந்த வருடம், அரசியல் களத்தில் சில விவாதங்கள் எழுந்தன.. அந்த நேரத்தில், உத்தரபிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி கூட்டம் ஒன்றில் உரையாற்றியிருந்தார்.
அப்போது, "தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது, அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்.. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

இலவச வாக்குறுதிகள்: இதனிடையே, தேர்தல் நேரத்தில் இலவச வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிரான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.. அபபோது, தலைமை நீதிபதி ரமணா, திமுக மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம்... நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்றும் நினைக்காதீர்கள், என்று கூறியிருந்தார்.
இதற்கு பிறகு, இந்தியா டுடே நிகழ்ச்சி தொகுப்பாளரிடம், அப்போதைய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பேசும்போது, இலவசங்கள் குறித்து தன்னுடைய கருத்தை கூறியிருந்தார்.
பிடிஆர் நறுக்: "இலவசங்களை தரக்கூடாது என்று சட்டத்தில் சொல்லவில்லையே.. அப்படி தரக்கூடாது என்று சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி அல்லது இந்த துறைகளில் எங்களை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாவது இருக்க வேண்டும். ஒருவேளை, எங்களை விட உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம்.. எதுவுமே இல்லாதபோது உங்க பேச்சை நாங்க ஏன் கேட்க வேண்டும்?" என்று பிடிஆர் கேட்டிருந்தார்.
இதையடுத்து, இலவசங்கள் தேவையா? இல்லையா? என்பது குறித்த விவாதங்கள் சோஷியல்மீடியாவில் வலுப்பெற்றது.. பாஜகவின் கருத்தை ஒரு தரப்பினர் ஆதரித்தார்கள், பிடிஆரின் கருத்தை இன்னொரு தரப்பினர் ஆதரித்தனர்.. இதற்கு பிறகு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் களைகட்ட துவங்கிவிட்டது.
சிலிண்டர்கள் : இந்த தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு அரை லிட்டர் பால் இலவசம், 5 கிலோ அரிசி இலவசம், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை தந்திருந்தது பாஜக.. ஆனால், பாஜகவையும் முந்திக்கொண்டது காங்கிரஸ்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய், டிப்ளமா படித்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற இலவச வாக்குறுதிகளே, கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அடித்தளமிட்டிருந்தது.
இதற்கு பிறகுதான், இலவசங்கள் இல்லாமல், இனி தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் கிடையாது என்று பாஜக மேலிடத்துக்கு முக்கிய நிர்வாகிகள் தரப்பில் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக பாஜக மத்திய கமிட்டி கூட்டத்திலும் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு பிறகே, கேஸ் சிலிண்டர் 200 ரூபாய் குறைக்கப்பட்டு அறிவிப்பும் வெளியாகியதாம்..
தேர்தல் அறிக்கை: அந்தவகையில், விரைவில் 5 மாநில தேர்தல்கள் வரப்போவதால், இப்போதே பாஜக, தேர்தல் அறிக்கையில் முனைப்பு காட்ட துவங்கிவிட்டதாம். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், என்னென்ன இலவச திட்டங்களை காங்கிரஸ் அறிவிக்க போகிறது? என்பதை அறிந்து அதற்கேற்றபடி பாஜகவும் களறமிங்க வேண்டும் என்று, முதல்வர் சிவ்ராஜ்சிங் கவுகானை, கட்சியின் மேலிடம் கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள்.
அதேபோல, எந்த மாதிரியான இலவச திட்டங்களை அறிவிக்கலாம்? மக்களை ஈர்க்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனைகளையும் மாநிலங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை, பாஜக மேலிடம் கேட்டு வருகிறதாம். அந்தவகையில், 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தினமும் 2 GB மொபைல் டேட்டா, இலவச ஸ்மார்ட் போன், இல்லத்தரசிக்கு மாதம் 3,000 ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கவும், பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
பிரியங்கா காந்தி: இந்த நேரத்தில், இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கடந்த ஜுன் மாதம், மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில், தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசியிருந்தார்..
அப்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம், பெண்களுக்கு மாதம் ரூ.1500, கேஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்றெல்லாம் தமிழ்நாட்டு மாடலிலேயே பிரச்சாரத்தில் அறிவித்திருந்தது பெருத்த கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்தியா கூட்டணி: அதுமட்டுமல்ல, புதிதாக உருவாகியுள்ள "இந்தியா கூட்டணி" பாஜகவுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் சொல்லிவருகிறார்கள்.. இந்தியா கூட்டணியைப் பார்த்து பயந்தே, கேஸ் விலையை குறைத்துவிட்டார்கள் என்று சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார்.
INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும் என்று மூத்த தலைவர் சரத்பவாரும் கமெண்ட் அடித்திருந்தார்.
உத்தவ் தாக்கரே: "இந்தியா" கூட்டணியில் பிரதமராக வர வாய்ப்புள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பாஜகவின் முகமாக ஒருவரை தவிர யார் இருக்கிறார்கள்? கர்நாடகத்தில் தோல்வியடைந்த பிறகு பாஜக, இனி யாரை முன்னிறுத்தும்" என்று உத்தவ் தாக்கரேவும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்போது, இலவசங்கள் என்ற விஷயத்தை நோக்கி பாஜக காய்நகர்த்த துவங்கி உள்ளதை, காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள போகிறது என்று தெரியவில்லை.
தேர்தல் நெருங்க நெருங்க, "இலவசம்" என்ற புள்ளியை நோக்கி தேசிய கட்சிகள் நகர தொடங்கியுள்ளதால், இந்த கட்சிகளின் மாஸ்டர் பிளான்களும் துரிதமாகி கொண்டிருக்கின்றன.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications