அரியலூர் மாணவி மரணம்.. "வார்டனை" வரவேற்ற திமுக எம்எல்ஏ.. டெல்லியில் போராட்டத்தில் குதித்த ஏபிவிபி!
டெல்லி: அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன் போராடி வருகின்றது.
தஞ்சாவூர் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூரை சேர்ந்த மாணவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி ஆகும்.

போராட்டம்
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இவர்கள் முதல்வர் வீட்டு வாசல் முன் போராட்டம் நடத்தி உள்ளனர். திடீரென போராட்டம் நடத்திய 32 பேர் நேற்று தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 29 பேரையும் 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிப்பாதியும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வார்டன்
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான பள்ளி வார்டன் சகாய மேரி நேற்று பெயிலில் வெளியே வந்தார். இவரை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வரவேற்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சால்வை போட்டு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டம்
பாஜகவினர் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ வரவேற்பு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏபிவிபி அமைப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இல்லம்
டெல்லி சாணக்யாபுரியில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்த இல்லம் முன் இன்று ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஜேஎன்யு பல்கலை மற்றும் டெல்லி பல்கலை மாணவர்கள் குவிந்தனர். பலர் காவி பேண்ட் அணிந்து, அரியலூர் மாணவியின் புகைப்படத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராக டெல்லியில் கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு உடனே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை என்ன
சகாய மேரியை சந்தித்த எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். மாணவி படித்த பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட ஏபிவிபி பிரிவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஏபிவிபி மாணவ பிரிவினர் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications