அன்றே சொன்னேன்-ஆணவம் தலைகுனிந்தது-அநீதிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி-ராகுல் காந்தி
டெல்லி: கடும் எதிர்ப்புக்குள்ளான விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். மேலும் விவசாயிகளின் சத்தியாகிரகத்துக்கு ஆணவம் தலைகுனிந்தது என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு (பாஜக) கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக முகாமிட்டு போராட்டங்களை நடத்தினர். ஒருநாள் போராட்டங்களாக இல்லாமல் குடும்பம் குடும்பமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் வாட்டும் வெயிலும் இடைவிடாமல் நீடித்தது.

மத்திய அரசு பிடிவாதம்
டெல்லியில் போராடிய விவசாயிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிடிவாதத்தையே காட்டியது. எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒருபோதும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என சொன்னது மத்திய அரசு. ஆனால் ஒரே ஒரு முறை கூட பிரதமர் மோடி டெல்லியில் போராடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

எண்ணற்ற பலிகள்
இந்த போராட்டத்தில் பங்கேற்று இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களின் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொடூர ஒடுக்குமுறைகளுக்குள்ளாகினர். உ.பி.யின் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷி மிஸ்ரா கார் ஏற்றியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெறியாட்டம் போட்டார். இந்த கொடூரத்தில் 4 விவசாயிகள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர்.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இத்தனை தியாகங்களுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு இன்று திடீரென விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாகவும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முறையாக ரத்து செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் காலம்தாழ்ந்த இந்த அறிவிப்பாக இருந்தாலும் உறுதியுடன் போராடிய விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றியாக இது கொண்டாடப்படுகிறது.
Recommended Video

ஆணவம் தலைகுனிந்தது- ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டுக்கு உணவளிக்கக் கூடிய விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முன் ஆணவம் தலைகுனிந்துவிட்டது. அநீதிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி, மத்திய அரசு இந்த விவசாய சட்டங்களை நிச்சயம் திரும்பப் பெறத்தான் போகிறது என தாம் பேசிய வீடியோ பதிவையும் ராகுல் காந்தி மீண்டும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். இன்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...நிச்சயம் மத்திய அரசு இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் என கூறியுள்ளார் ராகுல் காந்தி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications