சீனா ஊடுருவல்: அமித்ஷாவை தொடர்ந்து நேரு மீது அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு பாய்ச்சல்!
டெல்லி: நாடு விடுதலை அடைந்த போது இந்தியா- சீனா இடையே அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா காண்டு பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீனா அத்துமீற முயற்சித்தது. இதனை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து சீன ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தல். ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவோ, சீனாவின் அத்துமீறலுக்கு காரணமே காங்கிரஸும் நாட்டின் முதலாவது பிரதமர் நேருவும்தான் என குற்றம்சாட்டுகிறது.
சீனாவின் அத்துமீறல் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சீனாவிடம் மென்மைப் போக்கு கடைபிடிக்கப்பட்டது என்றார். அதேபோல் சீனாவுக்குதான் நேரு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெற்றுத் தந்தார் என்கிறது பாஜக. தெற்காசிய ஒற்றுமை என்ற அடிப்படையில் நேரு சில நெகிழ்வுத் தன்மை கொள்கைகளை பின்பற்றியதை சீனாவுக்கு ஆதரவான போக்கு என பாஜக விமர்சிக்கிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் நேரு மீது குற்றம்சாட்டி இருக்கிறார். அதாவது அருணாச்சல பிரதேசத்தின் எல்லையான தவாங் செக்டார் தொடர்பாக இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற தருணம். நேருவோ, தவாங் செக்டாரை நாம் பெற்று என்ன சாதிக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பெமா காண்டு கூறியதன் விவரம்: அருணாச்சல பிரதேச மாநிலமானது நெபாஃபா என்கிற பெயரில் வடகிழக்கு முன்னரனாக அழைக்கப்பட்ட காலம். அப்போது அருணாச்சல பிரதேச நிர்வாகம் அஸ்ஸாமின் கீழ் இருந்தது. 1949-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தவாங் செக்டாரில் நமது தேசியக் கொடியை ஏற்ற விரும்பினர் நமது ராணுவ அதிகாரிகள். அப்போது கவர்னராக இருந்த ஜெய்ராம்தாஸ் தெளலத்ராம், மேஜர் ஜெனரல் பாப் காடிங் ஆகியோர் இதில் முனைப்பாக இருந்தனர். ஆனால் பிரதமராக இருந்த நேரு, தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கேட்டார். ஆனாலும் மேஜர் பாப் காடிங், தவாங் செக்டாரில் நமது தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது முதல் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் தவாங் செக்டார் இருந்து வருகிறது. இவ்வாறு பெமா காண்டு கூறினார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் தவாங் செக்டார் மோதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,
கடந்த 9-ந்தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பிரிவில் நமது எல்லையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் விவரிக்க விரும்புகிறேன். 9-ம் தேதியன்று, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக் கோட்டை மீறி, தன்னிச்சையாக தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். சீன முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார்.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications