விரைவில் கைது? ED-யால் அலறும் கெஜ்ரிவால்.. டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு... பரபர காரணம்
டெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மீதான மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் கை ஓங்க தொடங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்தறை தொடர் சம்மன்களை அனுப்பியிருந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் கைது செய்யப்பட்ட பின்னர் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற சம்பாய் சோரனுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியதை போல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 5 முறை, விசாரணக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்களது எம்எல்ஏக்களை விலை பேச பாஜக முயன்று வருவதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
விரைவில் கைது? அமலாக்கத்துறையால் இறுகும் பிடி! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்
எனவே இன்று டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தபோவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 62 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. இங்கு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனில், ஒரே நேரத்தில் 28 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ வேண்டும். இதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுவிட்டால் ஆட்சியில் ஆம் ஆத்மி தொடரும். தான் சிறைக்கு சென்றால் கூட, நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி ஜெயித்துவிட்டால், அதை அசைக்க முடியாது. எனவேதான் இந்த திட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இறங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications