புகையுதே ‘இந்தியா’.. அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராகனும்! கொளுத்திப்போட்ட ஆம் ஆத்மி நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் அர்விந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், "நீங்கள் என்னிடம் கேட்டால் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று சொல்வேன். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி பேசுகிறேன்.

Arvind Kejriwal should be prime ministerial candidate for INDIA - AAP Spokes person

நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நம்பிக்கைக்குரிய போட்டியாளராக அவர் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி, அவரது தகுதி மற்றும் வேறு பல விவகாரங்களில் அர்விந்த் கெஜ்ரிவால் தைரியமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்தியா கூட்டணி நாட்டை புதிய பாதைக்கு அழைத்து செல்ல முயல்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வுடன் நாட்டில் கடுமையான பண வீக்கம் நிலவி வருகிறது. எங்கள் அரசாங்கம் இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து, முதியோர்களுக்கு இலவச யாத்திரை போன்றவற்றை வழங்கி வருகிறது.

அப்படி இருந்தும் நாங்கள் உபரி பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளோம். மக்கள் பிரச்சனைகளை எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதியான போட்டியாளராக அர்விந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார்." என்றார். இதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் ராகுல் காந்தி பிரதமராக விரும்புகிறார்கள். அதே நேரம் அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார் ஆகியோரும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை சிலர் கூறினாலும் திமுக மூத்த நிர்வாகிகள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை.

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்ஜேடி, சமாஜ்வாடி, ஜேடியு, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, என்சிபி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியாக இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளனர்.

இதற்கான முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் 2 வது கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் நடைபெற்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மும்பையில் மூன்றாவது கூட்டம் கூடுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+