கெஜ்ரிவாலை கைது செய்தால் இதுதான் நடக்கும்! ஜெயிலிலேயே கேபினட் கூட்டம் நடத்துவோம்..ஆம் ஆத்மி அமைச்சர்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தாலும் அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்தே கெஜ்ரிவால் பணியாற்றுவார் எனவும் அவர் கூறினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி மாநில அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட இந்தக் கொள்கையில் இடம் பெற்று இருந்த வரிக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே கசிய விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் மூலமாக மதுபான ஆலைகளின் அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததால் புகார்கள் வந்தன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த விவரங்களை கசியவிட்டு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதில் பணமோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இன்னமும் மணீஷ் சிசோடியா ஜாமீனில் கூட விடுதலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனடிப்படையில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2 ஆம் ஆம் தேதி ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படட்து. ஆனால், கெஜ்ரிவால் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை சம்மன் தெளிவற்றதாக இருப்பதாகவும் சம்மனை வாபஸ் பெற வெண்டும் எனவும் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலையும் அமலாகக்த்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டு இருப்பது டெல்லி மட்டும் இன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பிறகு பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் கூட சிறையில் இருந்தே பணியாற்றுவார் என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கெஜ்ரிவாலை மத்திய விசாரணை அமைப்புகள் கைது செய்தாலும் கூட சிறையில் இருந்தே நீங்கள் அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் கெஜ்ரிவாலிடம் கூறினர். நாங்கள் மக்களிடையே சென்றுஇருக்கிறோம்.
ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கிரமங்கள் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அனைத்து எம்.எல்.ஏக்களும் கெஜ்ரிவாலிடம் இத்தகைய கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள். ஜெயிலுக்கு சென்றாலும் கூட அவர் தொடர்ந்து முதல்வராகவே நீடிக்க வேண்டும் எனவும் டெல்லி மக்கள் அவரை முதல்வராக தேர்வு செய்து இருக்கிறார்கள். எனவே அவர்தான் முதல்வராக நீடிக்க வேண்டும். சிறைச்சாலையில் கூட கேபினட் கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம்" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications