டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டன் பயணிகள் கவனத்துக்கு.. டெல்லியில் ஆர்டி-பிசிஆர் சோதனை, 14 நாட்கள் குவாரண்டைன் கட்டாயம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்களின் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதால், பிரிட்டனில் (இங்கிலாந்து) இருந்து டெல்லிக்கு வரும் பயணிகளுக்கான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

புதிய மற்றும் மிகவும் மாறுபட்ட பரிணாமத்தில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியதால், டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை இரு நாடுகளையும் இணைக்கும் அனைத்து பயணிகள் விமானங்களையும் இந்தியா நிறுத்தியது. தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், இங்கிலாந்து பயணிகள், இந்திய வருகையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஒவ்வொரு மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

As UK flights to India resume, Delhi makes RT-PCR tests, 14-day quarantine must

டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளின் படி, இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸ் பரிசோதினைக்கு கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் டெல்லி விமான நிலையம் வந்த உடன் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொரோனா டெஸ்ட்டுக்கு பின்னர் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தும் வசதிக்கு அனுப்பப்படுவார்கள், அதேநேரம் கொரோனா வைரஸ் இல்லை என்றாலும் ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அதன்பிறகு ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில். "டெல்லி மக்களை இங்கிலாந்தில் இருந்து வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, டெல் அரசு முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இங்கிலாந்திலிருந்து வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சோதனைக்கு பின் நெகட்டிவ் வந்தாலும் தனிமைப்படுத்தும் வசதியில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவில் "மிகவும் கடுமையான" கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்களுக்கான தடையை ஜனவரி 31 வரை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். "மிகுந்த சிரமத்துடன், மக்கள் கொரோனா வைரஸ் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இங்கிலாந்தின் கொரோனா வைரஸ் நிலைமை மிகவும் மோசமானது. இப்போது, ​​ஏன் தடையை நீக்கி, எங்கள் மக்களை ஆபத்துக்குள்ளாக்குகிறீர்கள்? " என்று கெஜ்ரிவால் ட்விட்டரில் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

English summary
Delhi government has issued a set of Standard Operating Procedures (SOPs) for passengers who will be arriving in the national capital from the United Kingdom (UK) as flights between India and the UK resumed today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X