ஒரு எஸ்யூவி கார், 4 நீல கலர் நம்பர் பிளேட்கள்! டெல்லியில் செல்வாக்கான இடங்களில் ஊடுருவிய போலி தூதர்
டெல்லி: வெளிநாட்டுத் தூதர் போல வேடமிட்டு, டெல்லியின் பாதுகாப்பு மிகுந்த தூதரக வட்டாரங்களுக்குள் பல மாதங்களாக ஊடுருவிய அசாமை சேர்ந்த பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். குடியரசு தின விழாவுக்கு முன்பு நடந்துள்ள இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் உச்சப்பட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே டெல்லியில் வெளிநாட்டுத் தூதர் போல நடித்து தூதரக வட்டாரங்களில் ஊடுருவிய பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது
48 வயதான அந்தப் பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் அஸ்மா பேகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு முன்பே நடந்துள்ள இந்தக் கைது பேசுபொருளாகியுள்ளது. டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் வசித்த அஸ்மா பேகம், அண்டை வீட்டாரிடம் தன்னை ஒரு தூதரக அதிகாரி போலக் காட்டிக் கொண்டார். அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், அது தனது சொந்த வீடு என்றே கூறி வந்துள்ளார். மேலும், நீல நிறத் தூதரக நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்ட தனது காரை பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
யார் அந்த பெண்
குவகாத்தியைச் சேர்ந்த பேகம், பட்டதாரி என்றும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றுள்ளார். அவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சியின் அகில இந்தியச் செயலாளராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பல்வேறு விளையாட்டு அமைப்புகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் ஆலோசகராக முன்பு பணிபுரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது
கடந்த நவம்பர் மாதம் ஒரு வெளிநாட்டுத் தூதரகத்திடம் இருந்து ஒரு எஸ்யூவி காரை வாங்கிய பேகம், அதன் பதிவு நம்பரை தூதரகப் பயன்பாட்டில் இருந்து பெர்சனல் யூஸ் என்பதற்கு மாற்றத் தவறிவிட்டார்.. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தூதரகம் போலீசாரில் புகார் அளித்த பிறகு இது அம்பலமாகியுள்ளது பாதுகாப்புச் சோதனைகளைத் தவிர்க்க அந்தத் தூதரக நம்பர் பிளேட்டுகளைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதைப் பயன்படுத்தி, தூதரகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பேகம், தன்னை ஒரு வெளிநாட்டுத் தூதர் எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி வசந்த் விஹாரில் பேகமின் காரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரது காரில் மேலும் மூன்று செட் போலி தூதரக நம்பர் பிளேட்டுகள் மற்றும் கார் விற்பனை ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் இது குறித்துக் கேட்டபோது அவரால் தூதரக அங்கீகார ஆவணங்களை வழங்க முடியவில்லை. மேலும், எந்த நாட்டின் தூதர் என்பதைக் கூடச் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்.
வேறு யாராவது உடந்தை?
இதையடுத்து அவர் மீது மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேகம் எத்தனை காலமாக இதுபோல ஆள்மாறாட்டம் செய்து வந்தார்.. இவருக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications