மமதாவின் அதிரடி ஆட்டம்.. திரிணாமுல் காங்கிரஸில் அசோக் தன்வார், பவன்குமார், கீர்த்தி ஆசாத் ஐக்கியம்!
டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஹரியானாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் தன்வார் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஹரியானாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கால்பதிக்க உள்ளதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மமதா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி வருகை தந்தார். டெல்லியில் மமதாவை சந்தித்த அசோக் தன்வார், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான 2019 தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்தவருமான கீர்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பவன் வர்மா ஆகியோர் தங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
ஹரியானாவை சேர்ந்த தலித் தலைவர்களில் ஒருவர் அசோக் தன்வார். காங்கிரஸில் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ஆனால் ஹரியானா காங்கிரஸில் வெடித்த கோஷ்டி பூசலைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மமதா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மமதா மகத்தான தலைவர்
அசோக் தன்வாரை வரவேற்று அவரது ஆதரவாளர்களிடையே பேசிய மமதா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ள உங்களை வரவேற்கிறேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் குடும்பத்தில் ஒரு அங்கம். அசோக் தன்வார் இனி கோவாவுக்கும் கொல்கத்தாவுக்கும் பயணம் மேற்கொள்வார்.. நான் ஹரியானாவுக்கு செல்ல இருக்கிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் அசோக் தன்வார் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவின் ஆட்சியால் மக்கள் பெருந்துயரை எதிர்கொள்கின்றனர். நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், தலித்துகள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் மக்களுக்கு தலைமை ஏற்க தகுதியான தலைவர் மமதா பானர்ஜி மட்டும்தான் என்றார்.

திரிணாமுல் காங்கிரஸில் கீர்த்தி ஆசாத்
இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரரரான கீர்த்தி ஆசாத்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கீர்த்தி ஆசாத், டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்து மறைந்த அருண் ஜேட்லியுடன் மோதினார். இதனால் பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு காங்கிரஸில் கீர்த்தி ஆசாத் இணைந்தார். தற்போது மமதா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

பீகாரின் பவன் வர்மா
மேலும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான பவன் வர்மாவும் மமதா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அசோக் தன்வார், கீர்த்தி ஆசாத், பவன் வர்மா ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் மூலம் ஹரியானா, டெல்லி மற்றும் பீகாரிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமது பயணத்தை இனி தொடங்க இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு பேசிய மமதா பானர்ஜி, ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் பங்களா, ஜெய் கோவா, ஜெய் ஹரியானா, ராம் ராம் என முழக்கமிட்டார்.

இன்று மோடியுடன் சந்திப்பு
இதனிடையே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை மமதா பானர்ஜி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி உதவிகள், பி.எஸ்.எப். படையினருக்கான அதிகார எல்லை அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து மமதா விவாதிக்க உள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மமதா பானர்ஜி சந்தித்து பேசக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications