"முஸ்லீம் ஓட்டு தேவையில்லை.. பிரச்சாரத்திற்கு கூட அங்கு செல்ல மாட்டோம்!" அசாம் பாஜக முதல்வர் பரபர
டெல்லி: தனக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் தேவையில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் இப்போது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

அங்கு மொத்தம் 126 சீட்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 75 இடங்கள் கிடைத்தன. அதேநேரம், பல்வேறு கட்சிகளை இணைத்து கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
வாக்கு வேண்டாம்: இதற்கிடையே சமீபத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனக்கு இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். வாக்கு வங்கி அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இதனால் எப்போதும் காங்கிரஸைப் போலத் தான் பிரச்சினைகளை முஸ்லிம் சமூகத்துடன் இணைக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "இப்போது எனக்கு முஸ்லிம் வாக்குகள் வேண்டாம். ஏனென்றால் வாக்கு வங்கி அரசியலால்தான் இங்கு எல்லாப் பிரச்சனைகளும் நடக்கிறது.. மாதம் ஒருமுறை முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்களைச் சந்திக்கிறேன்.
ஆனால் நான் அரசியலையும் வளர்ச்சி திட்டங்களையும் இணைக்க மாட்டேன்.. இஸ்லாமியர்களுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் ஒரே கனெக்ஷன் இந்த வாக்கு வங்கி மட்டுமே.. அதற்காகவே காங்கிரஸ் அனைத்தையும் செய்கிறது. இதை அவர்கள் உணர வேண்டும்.
இஸ்லாமியப் பெண்கள்: எனக்கு அவர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம்.. அங்குப் பிரசாரத்திற்கும் செல்ல மாட்டோம். ஆனாலும் அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் பகுதிகளை டெவலப் செய்வேன்.. குழந்தைத் திருமணத்தை நிறுத்த வேண்டும், மதரஸாக்களுக்கு செல்வதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அனைவரும் கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். குறிப்பாக முஸ்லிம் பெண் மாணவிகள் படிக்க ஏதுவாக தனியாக ஏழு கல்லூரிகளைத் திறந்து வைக்கப் போகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வென்ற நிலையில். 2021இல் அசாமின் 15வது முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா நியமிக்கப்பட்டார். பாஜகவுக்கும் தங்களுக்குமான உறவு என்பது வாக்குகளைக் கடந்து இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

எதுவும் செய்யவில்லை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளையோ, பள்ளிகளையோ காங்கிரஸ் எதையும் கட்டவில்லை. இதை நாம் செய்ய வேண்டும். இதைத் தான் அடுத்த 10-15 ஆண்டுகள் செய்வேன். அதன் பிறகு தான் பிறகு முஸ்லிம்களிடம் சென்று ஓட்டு கேட்பேன். இப்போது அவர்களிடம் வாக்கு கேட்டால்.. ஏதோ வாக்கிற்காக இவை அனைத்தையும் செய்வது போல ஆகிவிடும். ஆனால், எனக்கு அப்படியொரு உறவில் விருப்பம் இல்லை
பிரசாரத்திற்குக் கூட செல்லவில்லை: கடந்த 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடந்த பிரசாரத்தின் போது கூட நான் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு செல்லவில்லை.. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் செல்வேன் என்று கூறியிருந்தேன். இந்த முறையும் சொல்கிறேன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்.. அவர்கள் வாழும் பகுதிகளில் பாஜக பிரசாரம் செய்யாது" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 2015இல் பாஜகவில் இணைந்தார். அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்கியவர் பிஸ்வா சர்மா தான். 2016 முதல் 2021 வரை முதல்வராக இருந்த சர்பானந்தா சோனோவால் அரசில் சுகாதாரத் துறையை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். 2016இல் தொடர்ந்து மூன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸின் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர











Click it and Unblock the Notifications