நீ வா.. நீ வா.. நான் நிக்கலை.. அச்சத்தோடு ஓடிய ஆஸி. வீரர்கள்.. மேட்சில் ஒரே பரபரப்பு.. என்ன நடந்தது?
மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இன்று கடுமையாக திணறினார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் குவாஜா 81 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி எப்படியும் 300 ரன்களாவது எடுக்கும். இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிடில் ஆர்டர்
ஆனால் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் விக்கெட்டை வாரிக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் இறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப் மட்டும் 72 ரன்கள் எடுத்தார். மற்றபடி ஸ்மித், வார்னர் என்று டாப் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சமி பவர் பிளேவிலும், பின்னர் கடைசி கட்டத்திலும் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட் எடுத்தார். இதனால் 263-10 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அவுட் ஆனது. இதையடுத்து முதல் நாளே களமிறங்கிய இந்திய விக்கெட் எதையும் இழக்கவில்லை என்றாலும் இரண்டாவது நாளில் இந்திய அணி அடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

கோலி
கோலி, அக்சர் பட்டேல், அஸ்வின் 3 பேர் மட்டுமே கொஞ்சம் நிதானமாக ஆடினார்கள். கே. எல் ராகுல் மீண்டும் சொதப்பி வெறும் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி 44 ரன்கள் எடுத்து மிடில் ஓவர்களில் விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார். பின்னர் லோவர் ஆர்டரில் இறங்கிய அக்சர் 74 ரன்கள், அஸ்வின் 34 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் 262-10 ரன்கள் எடுத்தது. ஒரு ரன் முன்னிலையோடு இறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று 1 விக்கெட்டை மட்டும் இழந்து 61 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட்
இன்று தொடக்கத்திலேயே அஸ்வின் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்க, அதன்பின் ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார். பின்னர் அஸ்வின் மீண்டும் ஒரு விக்கெட் எடுக்க ஆஸ்திரேலியாவின் அஸ்திரம் தடம் புரண்டது. அதன்பின் கடைசியில் வரிசையாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை உலுக்கி எடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா இன்று 12.1 ஓவர்கள் மட்டும் வீசி 7 விக்கெட் எடுத்தார். இவர் வெறும் 42 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதுதான் ஜடேஜாவின் சிறப்பான டெஸ்ட் பவுலிங் ரெக்கார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சம்
இன்றைய மேட்சில் கடைசி 3 விக்கெட்டிற்கு ஆடிய அலெக்ஸ் கேரி, நேதன் லைன், மேத்யூ என்று 3 வீரர்களும் பேட்டிங் செய்யவே அஞ்சினார்கள். ஆஸ்திரேலியாவில் இந்திய பவுலர்கள் பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள பயப்படுவார்கள். அதை போலவே இந்திய ஸ்பின் பவுலர்களை பார்த்து ஆஸ்திரேலிய லோவர் ஆர்டர் கடுமையாக திணறியது. பேட்டிங் செய்ய விருப்பம் இன்றி அருகிலேயே அடித்துவிட்டு ஓட பார்த்தனர். பக்கத்திலேயே அடித்துவிட்டு நான் ஸ்டிரைக்கர் எண்டிற்கு ஓட முயன்றனர். நீ வா.. நீ வா.. நான் நிக்கலை என்பது போல அச்சத்தோடு ஓடினார்கள். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயலால் இந்திய அணிக்கு 3 ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications