டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Suicide in Tamil Nadu: 12,665 தற்கொலைகளுடன்...நாட்டிலேயே 2ஆம் இடத்தில் தமிழ்நாடு!!

Google Oneindia Tamil News

டெல்லி: 2019ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 381 பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது. நாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

தேசிய குற்ற ஆவண மையம் கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு முந்தைய 2018ஆம் ஆண்டில் 1,34,516 பேரும், 2017ஆம் ஆண்டில் 1,29,887 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

Average 381 suicides daily in India in 2019 tamil nadu is in second place says NCRB

நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் சதவீதம் பத்து லட்சம் பேருக்கு 0.2 என்றளவில் 2019 மற்றும் 2018 ஆகிய நாடுகளில் அதிகரித்துள்ளது. நகரங்களில் தற்கொலை 13.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருந்து குடித்து 25.8 சதவீதம் பேரும், தூக்கில் தொங்கி 53.6 சதவீதம் பேரும், தண்ணீரில் மூழ்கி 5.2 சதவீதம் பேரும், தீக்குளித்து 3.8 சதவீதம் பெரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்ப பிரச்சனைகளால் 32.4 சதவீதம் பேரும், திருமண சிக்கல்கள் காரணமாக 5.5 சதவீதம் பேரும், உடல்நலக் கோளாறு காரணமாக 17.1 சதவீதம் பேரும், இந்த வகையில் மொத்தம் 55 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட 100 பேரில் 70.2 சதவீதம் பேர் ஆண்கள், 29.8 சதவீதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஆண்களில் 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள். தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 62.5 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.

திண்டுக்கல் இளம் பெண் தீக்குளிப்பு சம்பவம்.. அசைக்காமல் வீடியோ எடுத்த மைத்துனர் கைது திண்டுக்கல் இளம் பெண் தீக்குளிப்பு சம்பவம்.. அசைக்காமல் வீடியோ எடுத்த மைத்துனர் கைது

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் 18,916, தமிழ்நாட்டில் 13,493, மேற்குவங்கத்தில் 12,665, மத்தியப்பிரதேசத்தில் 12,457, கர்நாடகாவில் 11,288 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 3.9 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தான் அதிகளவில் குடும்ப தற்கொலைகள் நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 12.6 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 16.3 சதவீதம் பேர் ஆரம்பக் கல்வி கற்றவர்கள். 19.6 சதவீதம் பேர் நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்தவர்கள். 23.3 சதவீதம் பேர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், 3.7 சதவீதம் பேர் டிகிரி முடித்தவர்கள் என்று புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Average 381 suicides daily in India in 2019 tamil nadu is in second place says NCRB
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X