விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு!
சென்னை: ஈரான் - இஸ்ரேல் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் XP100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் விமான எரிபொருள் கட்டணம் உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் கட்டணம் கணிசமாக உயர்ந்து இருப்பதால் விமான கட்டணம் கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிபொருள் சப்ளை குறைந்துள்ள நிலையில், தட்டுப்பாடு ஏற்படாத வாறு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கச்சா எண்ணெய் கொள்முதல் விலை அதிகரித்து இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்படாதவாறு உற்பத்தி வரி பெட்ரோல், டீசலுக்கு கடந்த வாரம் குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், பிரீமியம் ரக பெட்ரோல் விலை கடந்த மாதம் 20 ஆம் தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பிரிமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் XP100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், விமான எரிபொருள் (ATF) விலை கிலோலிட்டருக்கு ₹2 லட்சத்தைத் தாண்டி உச்சம் பெற்றுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது. XP100 பெட்ரோல் லிட்டருக்கு ₹149-ல் இருந்து ₹160 ஆகவும், எக்ஸ்ட்ரா க்ரீன் பிரீமியம் டீசல் ₹91.49-ல் இருந்து ₹92.99 ஆகவும் உயர்ந்துள்ளது.
உயர் ரக வாகனங்களுக்கான இந்தியாவின் முதல் 100-ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் இது. விலையேற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், உலகின் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்கா-ஈரான் போரால் தளவாட செலவுகள் அதிகரித்ததே காரணம் என நம்பப்படுகிறது. விமான எரிபொருள் கட்டணம் கணிசமாக உயர்ந்து இருப்பதால் விமான கட்டணம் கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications