டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 வாரம்தான் கெடு.. அதற்குள் பேசி தீர்க்க வேண்டும்.. முடிவை நெருங்குகிறது அயோத்தி பிரச்சனை!

அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இன்னும் 80 நாட்களுக்குள் இந்த பிரச்சனை மொத்தமாக முடியும் நிலை உருவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கு: 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்.. வீடியோ

    டெல்லி: அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இன்னும் 80 நாட்களுக்குள் இந்த பிரச்சனை மொத்தமாக முடியும் நிலை உருவாகி உள்ளது.

    அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த குழுதான் அயோத்தி பிரச்சனை குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்தும். முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்படும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    கடைசில விஜயகாந்த்தை இப்படி கடைசில விஜயகாந்த்தை இப்படி "வசனம்" பேச வச்சுட்டீங்களேப்பா.. !

    8 வாரம் தான்

    8 வாரம் தான்

    இந்த குழு இன்னும் 4 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பின் 8 வாரத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்து இறுதி தீர்ப்பை அளிக்கும்.

    முக்கியம்

    முக்கியம்

    இந்த மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையை நீதிமன்றம் கவனிக்கும். இதுகுறித்து எந்த விதமான சிறிய தகவல் கூட வெளியில் கசிய கூடாது. இந்த பேச்சுவார்த்தை ஃபைசாபாத்தில் நடைபெறும். விசாரணையில் ரகசியம் காப்பதே மிக முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குழு

    ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குழு

    இந்த குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இருப்பது முக்கியமான விஷயம் ஆகும். இவர் ஏற்கனவே ராமர் கோவில் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் அப்போது இவருக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    முடியும்

    முடியும்

    இந்த குழு மூலம் அயோத்தி பிரச்சனை தேர்தலுக்கு முன் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்க 80 நாட்களாவது குறைந்தபட்சம் இருக்கிறது. அதனால் அயோத்தி பிரச்சனையில் இன்னும் 50 நாட்களுக்குள் முக்கியமான முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Ram Janmabhoomi-Babri Masjid land dispute case: Supreme Court says mediation process has to start within four weeks and to be completed within eight weeks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X