• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பேரழிவு!" இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! அதுவும் சில மாதங்களில்! பாபா வாங்கா பகீர் கணிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா குறித்து பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்பு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

கியூபா நாட்டை சேர்ந்தவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. 81 வயதான இவரைப் பாபா வாங்கா என்றே அவரை பின்தொடர்பவர்கள் கூப்பிடுகிறார்கள்.

வரும் காலங்கள் குறித்துப் பல முறை இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. இதனிடையே இந்தியாவில் இந்தாண்டு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக் பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக்

 பாபா வங்கா

பாபா வங்கா

பாபா வங்கா என அழைக்கப்படும் இந்த ஜோதிடர் தனது கணிப்புகள் துல்லியமாகவே இருந்து உள்ளதாகக் கூறுகிறார். இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உள்ளிட்ட பல விவகாரங்களை அவர் துல்லியமாகக் கணித்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் வெளியிட்ட கணிப்புகளில் சுமார் 85% அப்படியே துல்லியமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கணிப்புகள்

கணிப்புகள்

செர்னோபில் அழிவு, இளவரசி டயானாவின் மரணம், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, 2004 தாய்லாந்து சுனாமி மற்றும் பராக் ஒபாமா அமெரிக்கா அதிபர் ஆனதை கூட இவர் துல்லியமாகக் கணித்து உள்ளார். இவருக்கு 12 வயது இருந்த போது, பெரிய புயலின் போது மர்மமான முறையில் இவரது பார்வை பறிபோனது. இந்தச் சம்பவத்திற்குப் பின், எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தியைக் கடவுள் தனக்கு வழங்கியதாக அவர் கூறுகிறார்.

உலகம்

உலகம்

வரும் 5079இல் வரை ஆண்டுக்கு ஆறு கணிப்புகளை அவர் இப்போதே விட்டுச்சென்றுள்ளார். மேலும், 5079ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகமே அழிந்துவிடும் என்றும் அவர் கணித்து உள்ளார். இதற்கிடையே இந்தியாவில் என்ன நடக்கும் என்பது குறித்தும் சில கணிப்புகளை அவர் செய்துள்ளார். அததில் இந்த ஆண்டு இந்தியாவில் மோசமான பஞ்சம் ஏற்படும் என்று கணித்து உள்ளார். இதற்கு கடுமையான வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 காரணம் இதுதான்

காரணம் இதுதான்

பூமியின் வெப்ப நிலை காரணமாக இந்த வெட்டுக்கிளி தாக்குதல் நடக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களை தாக்கி அழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் நாட்டில் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளது. நாட்டில் கடந்த சமீப ஆண்டுகளில் இதுபோன்ற வெட்டுக்கிளி தாக்குதல் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட இப்போது பாபா வங்கா எச்சரித்து உள்ளதால் அது பேசுபொருள் ஆகியுள்ளது.

 இந்தாண்டு கணிப்புகள்

இந்தாண்டு கணிப்புகள்

ஏனென்றால் அவர் 2022க்கு என ஆறு கணிப்புகளை வைத்திருந்தார். அதில் இதுவரை இரண்டு உண்மையாகி உள்ளது. பல ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படும் எனக் கணித்து இருந்தார். அது அப்படியே நடந்தது. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

 போர்ச்சுகல் & இத்தாலி

போர்ச்சுகல் & இத்தாலி

அதேபோல வறட்சி காரணமாகப் பெரிய நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கூறி இருந்தார். அதேபோல போர்ச்சுகல் மற்றும் இத்தாலி தனது நாட்டில் உள்ள மக்கள் நீரைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கட்டுப்பாட்டை விதித்தது.1950க்கு பிறகு இத்தாலியில் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இத்தாலியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 வரும் காலங்கள்

வரும் காலங்கள்

அடுத்து வரும் ஆண்டுகள் தொடர்பாகவும் அவர் பல முக்கிய கணிப்புகளைச் செய்துள்ளார். அதாவது 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் 2028இல் வீனஸுக்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல 2046இல் உறுப்பு மாற்றுத் தொழில்நுட்பம் காரணமாக மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும் அவர் கணித்தார். அதேபோல 2100இல் முதல்,செயற்கை சூரிய ஒளி காரணமாகப் பூமியில் இரவு என்பதே இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

English summary
Baba Vanga says India will face severe damage: Bulgarian mystic Baba Vanga prediction about India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X