ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் நீக்கம்.. இது 'தள்ளுபடி' இல்லை என மத்திய அரசு புது விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் சுமார் 5.82 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதை தள்ளுபடி என்று சொல்லிவிட முடியாது என்று விளக்கமளித்துள்ள சவுத்ரி, நிதி நிர்வாக வசதிக்காக செய்யப்பட்ட நடவடிக்கை என்று கூறியிருக்கிறார்.

bank Public sector MP su venkatesan

வாராக்கடன் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதற்கு மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலின்படி, "கடந்த 2020-21 நிதியாண்டில் அதிகபட்சமாக 1.33 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தொகை 2021-22 இல் 1.16 லட்சம் கோடி ரூபாயாக சற்று குறைந்தது, பின்னர் 2022-23 இல் 1.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

2023-24 ஆம் ஆண்டில் தள்ளுபடி தொகை மேலும் குறைந்து 1.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, நடப்பு நிதியாண்டான 2024-25 இல் இது 91,260 கோடி ரூபாயாக உள்ளது.

பெரிய அளவிலான தள்ளுபடிகள் இருந்தபோதிலும், மீட்பு முயற்சிகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த தொகையில் சுமார் 28 சதவீதத்தை வசூலித்துள்ளன. சிவில் வழக்குகள், கடன் வசூல் தீர்ப்பாயங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் கீழ் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடன் தள்ளுபடி செய்வது, கடனைப் பெற்றவர்களை கடனில் இருந்து விடுவிப்பதில்லை. தள்ளுபடி என்பது கடன் வாங்கியவர்களின் பொறுப்புகளை தள்ளுபடி செய்வதில்லை, எனவே இது கடன் வாங்கியவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து பொறுப்பாவார்கள். மேலும் இந்தக் கணக்குகளில் தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி வாரியங்களின் ஒப்புதலுடன் கடன் தள்ளுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக, முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு மற்றும் கடன் செயல்படாத கடனாக மாறிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் 21.68 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ளது" என்று சவுத்ரி கூறியிருக்கிறார்.

இது குறித்து மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கசேடன்,

"வராக்கடன் என்று அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்கிற இந்த தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள். 2021 - 25 ஐந்து நிதியாண்டுகளில், பொதுத்துறை, தனியார் துறை, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில், வராக்கடன்களாக அறிவிக்கப்பட்ட தொகை 18,14,360 கோடி.

வராக்கடன்களில் இந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகை 4,16,205 கோடி. வசூல் செய்யப்படாத தொகை 13,98,155 கோடி. வசூல் விகிதம் 23% மட்டுமே. 2025 ஆகஸ்ட் 12 அன்று நீங்கள் கேள்வி எண் 2617 க்கு மாநிலங்களவையில் தந்த பதில்தான் இந்த விவரங்கள் எல்லாம்.

கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் "வேட்டை". வராக்கடன் வசூல் என்பது தொடர் நடவடிக்கை என்பது அரசின் வாதம். எப்போதுதான் வசூல் செய்வீர்கள் என்பதுதான் கேள்வி. நீங்கள் 2014 லிருந்து பெயர்களோடு, தொகையோடு கணக்கு கொடுங்கள். தேசம் பார்க்கட்டும் மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறதென்று" தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+