Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொண்ணை ரெடி பண்ணுங்க.." பஜ்ரங் புனியா என்ன செய்தார் தெரியுமா.. பிரிஜ் பூஷன் பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அவர் பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜக எம்பியாகவும் இருந்து வருகிறார்.இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தது.

 Bajrang Punia askes to Arrange a Girl Brij Bhushan Singh Allegations amid protest

கடந்த ஜனவரி மாதமே இந்த பிரச்சினை எழுந்தது. அப்போதே ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டம்: புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இது குறித்து விசாரணைக்கு மேரி கோம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அப்போது இந்த பிரச்சினை சற்றே ஓய்ந்தது. இந்த குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் நடவடிக்கை இல்லை என்று கூறி மீண்டும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த 23ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கிய வீரர்கள், பிரஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகப் பல புகார் அளித்த பிறகும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

பரபர புகார்: இதற்கிடையே அவருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர்களில் ஒருவரான பஜ்ரங் புனியா மீது பிரிஜ் பூஷன் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது தன்னை மாட்டிவிட ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யுமாறு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒருவரிடம் பேசியுள்ளதாகவும் அந்த ஆடியோவை கமிட்டியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி அல்லது அமித் ஷா அல்லது பாஜக தலைவர் ஜேபி நட்டா தன்னை பதவி விலகச் சொன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆறு முறை எம்.பி.யான பிரிஜ் பூஷன், தன் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடியிடம் இதுவரை பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

வேதனை: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இவர்களின் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளால் மல்யுத்த கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எல்லாம் முடங்கிப் போய் இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக எந்தவொரு வேலையும் நடக்கவில்லை. என்னைத் தூக்கிலிட வேண்டும் என்றால் கூட தூக்கில் இடுங்கள் என்றே நான் சொல்கிறேன்.. ஆனால் மல்யுத்த நடவடிக்கையை நிறுத்தக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். போட்டிகள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்" என்றார்.

முன்னதாக சமீபத்தில் அவர் இந்தி செய்தி சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. எனக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீரர்களை உண்மையில் யாரோ இயக்குகிறார்கள். இதில் அவர்கள் மீதும் எந்த தவறும் இல்லை. அவர்கள் வெறும் கருவிகள் தான்" என்றார்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்வியால் கடுப்பான ​​​​பிரிஜ் பூஷன், "முன்பு, நான் 100 குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகச் சொன்னார்கள். இப்போது 1000 என்கிறார்கள். இப்படி அவர்கள் ஏதேதோ சொல்லி வருகிறார்கள். இறுதியில் உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரிய வரும்" என்றார்.

புகார்கள் என்ன: பல மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டெல்லி போலீசார் அவர் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும், வீராங்கனைகள் தந்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+