Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கலில் ஷேக் ஹசீனா.. நீண்டகாலம் அடைக்கலம் கொடுக்க நம் நாடு தயங்குவது ஏன்? பின்னணியில் 3 காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்ட தொடர் போராட்டம், வன்முறையால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளார். ஆனால் நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்க இந்தியா தயங்கி வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள 3 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வங்கதேசம் இருந்தது. கிழக்கு பாகிஸ்தான் என முதலில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டில் தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது. இந்த தனி நாடு அமைய முக்கிய காரணம் ஷேக் முஜ்புர் ரஹ்மான். இவர் தான் அந்த நாட்டின் தேசப்பிதா என அழைக்கப்படுகிறார்.

Bangladesh Sheikh Hasina India

பாகிஸ்தானுக்கு எதிராக தனி நாடு கோரி யுத்தம் நடத்திய ஷேக் முஜ்புர் ரஹ்மான், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி உதவியுடன் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு அவரே வங்கதேசத்தின் முதல் பிரதமராகவும் செயல்பட்டார். இந்த ஷேக் முஜ்புர் ரஹ்மானின் மகள் தான் ஷேக் ஹசினா.

இவர் கடந்த 2009 முதல் கடந்த 5ம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்தார். அதன்பிறகு அவர் ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அங்கு வெடித்த மாணவர்கள் போராட்டம் தான் காரணம். அதாவது பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை தனிநாடாக்க போராடி உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடு கடந்த 2018 ல் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு முறையை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டது.

ரகசிய இடம்: இதனை எதிர்த்து தான் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாறிய நிலையில் அவர் தற்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார். ஷேக் ஹசீனாவை பொறுத்தவரை நம் நாட்டுடன் நல்லுறவில் தொடர்ந்து வந்தார். இதனால் உயிருக்கு பயந்து ஓடிவந்த அவருக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. தற்போது ஷேக் ஹசீனா டெல்லி அருகே பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தற்காலிகமானது: ஏற்கனவே கடந்த 1975ம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜ்புர் ரஹ்மான் உட்பட அவரது குடும்பத்தினர் சொந்த ராணுவத்தால் வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ஜெர்மனில் இருந்து இந்தியா வந்த ஷேக் ஹசீனா தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் 1975ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை 6 வருடம் டெல்லி பண்டாரா சாலையில் அடைக்கலம் புகுந்து இருந்தார். அதன்பிறகு தற்போது 2 வது முறையாக அவர் நம் நாட்டில் அடைக்கலம் வந்துள்ளார். இருப்பினும் இது தற்காலிகமானது தான். கடந்த முறையை போல் ஆண்டு கணக்கில் மத்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எங்கு செல்வார்: இதனால் விரைவில் ஷேக் ஹசீனா ஐரோப்பிய நாடுகளில் ஏதேனும் ஒன்றில் தஞ்சமடையலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை ஷேக் ஹசீனா தொடங்கியுள்ளார். இதில் பிரிட்டனை அவர் தேர்வு செய்துள்ளார். பிரிட்டனில் அடைக்கலம் கோரிய நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கபட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஷேக் ஹசீனா தனது சகோதரி ரெஹானாவின் மகன் ரத்வான் முஜிப் சித்திக் வசிக்கும் பின்லாந்து அல்லது மகன் சஜீப் வசேத் உள்ள அமெரிக்காவில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐக்கிய அமீரகத்தில் அடைக்கலம் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 முக்கிய காரணங்கள்: இத்தகைய சூழலில் தான் பலருக்கும் ஒரு கேள்வி வந்துள்ளது. அதாவது நமக்கு விசுவாசமாக செயல்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு நம் நாடு ஏன் தற்காலிகமாக மட்டுமே அடைக்கலம் கொடுக்கிறது? ஏன் இந்தியா அவருக்கு நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்க தயங்குகிறது? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஆராய்ந்தால் 3 முக்கிய காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்: அதாவது கடந்த முறை 1975 ம் ஆண்டில் டெல்லியில் ஷேக் ஹசீனா நம் நாட்டில் அடைக்கலமானபோது அவர் மீது பரிதாபம் இருந்தது. வங்கதேசத்தை உருவாக பாடுபட்ட தந்தையை இழந்த ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு மக்கள் பரிவு காண்பித்தனர். இதனால் இந்தியா அடைக்கலம் கொடுத்தது பாசிட்டிவ்வாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வன்முறை அரங்கேறி உள்ளது. ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் சில விஷயங்களில் அவர் சர்வாதிகார போக்கை கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நம் நாடு ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்க தயங்குகிறது.

2 வது காரணம்: மேலும் நம் நாட்டையொட்டியே வங்கதேசம் உள்ளது. தற்போது அங்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கொந்தளிப்பு மனநிலை இருக்கும் சூழல் நாம் அவருக்கு அடைக்கலம் கொடுத்தால் அந்த நாட்டில் நம் நாட்டுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பார்கள். இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குகிறார். மேலும் நம் நாட்டின் கிழக்கு எல்லையில் தேவையின்றி பதற்றம் ஏற்படலாம் என மத்திய அரசு நினைக்கிறது. ஏனென்றால் நம் நாடு, வங்கதேசத்துடன் 4,096 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இவ்வளவு பெரிய எல்லையில் பதற்றம் ஏற்படும் பட்சத்தில் அது பெரும் பிரச்சனையாக மாறலாம்.

3 வது காரணம்: மேலும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இஸ்லாமிய குழுக்கள் ஒன்றிணைந்துள்ளன. இதில் சில குழுக்கள் பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் இந்தியா ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் அது இந்தியாவுக்கு தேவையில்லாத தலைவலியை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த 3 காரணங்களால் தான் ஷேக் ஹசீனாவுக்கு நம் நாடு நீண்டகாலம் அடைக்கலம் கொடுக்க தயங்கி வருவதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+