"அது நாடா.. இல்லை கொலையாளிகளின் புகலிடமா.." கனடாவை கடுமையாக விமர்சித்த வங்கதேசம்.. சீன் மாறுதே
டெல்லி: இந்தியா கனடா மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே இலங்கை அமைச்சர் கனடாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறியிருந்தார். இதற்கிடையே இப்போது வங்கதேச வெளியுறவு அமைச்சரும் கனடாவை விமர்சித்துள்ளார்.
இந்தியா கனடா இடையே சில காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும், கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து உலக நாடுகள் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. இதற்கிடையே இப்போது சர்வதேச அரசியல் மெல்ல மாறி வருகிறது.
விமர்சனம்: கனடாவுக்கு எதிராக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏகே அப்துல் மொமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இலங்கை அமைச்சர் கனடாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறிய நிலையில், இப்போது வங்கதேச அமைச்சரும் கனடாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கனடாவின் நாடு கடத்தும் கொள்கைகளை வங்கதேசம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
வங்கதேசத்தின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த நூர் சவுத்ரியை நாடு கடத்த கனடா மறுக்கும் நிலையில், அதன் காரணமாகவே கனடாவை இப்போது வங்கதேச வெளியுறவு அமைச்சரும் விமர்சித்துள்ளார்.
புகலிடம்: இது குறித்து வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏகே அப்துல் மொமன் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கனடா இப்போது அனைத்து கொலைகாரர்களின் புகலிடமாக மாறிவிட்டது. கொலையாளிகள் கனடாவுக்குச் சென்று தஞ்சம் அடையலாம். அங்கு அவர்களுக்கு அற்புதமான வாழ்க்கை கிடைக்கும் என்பதே இப்போது நிலைமையாக இருக்கிறது. ஆனால், அந்த கொலையாளிகளால் இங்கே பல குடும்பங்கள் துயரத்தில் உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
கனடா மரண தண்டனைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வங்கதேச அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த நூர் சவுத்ரிக்கு வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கனடா நூர் சவுத்ரியை நாடு கடத்த சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலையிட முடியாது: தொடர்ந்து வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏகே அப்துல் மொமன் பேசுகையில், "எங்கள் நீதித்துறை சுதந்திரமானது, அதில் அரசால் தலையிட முடியாது. ஆனால், நூர் சவுத்ரிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் மீண்டும் வங்கதேசத்திற்கு வந்தால் அதிபரிடம் கருணை மனு கொடுக்கலாம். அதிபர் அவரது கருனை மனுவை ஏற்றால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாம்.
மனித உரிமைகள் என்பது பல நேரங்களில் பலரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.. ஏனெனில் இது சில சமயங்களில் கொலையாளிகள், பயங்கரவாதிகளைப் பாதுகாக்க இந்த மனித உரிமை என்ற வார்த்தையே போதும் என்ற நிலை இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா உடனான மோதல்: தொடர்ந்து இந்தியா கனடா மோதல் குறித்துப் பேசிய அவர், "இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம், கனடா உடனும் நல்லுறவு இருக்கிறது. இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள் தான். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் என்ன பிரச்சினை எனத் தெரியாது. ஆனால் கனடாவுடன் எங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது.
முன்பே கூறியது போலக் கொலையாளி நூர் சௌத்ரி கனடாவில் நன்றாக வாழ்கிறார். வங்கதேச தந்தையான பங்கபந்துவின் கொலையாளியை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். அவர் கனடா குடியுரிமை பெற்றுள்ளாரா இல்லை எனத் தெரிந்து கொள்ளக் கனடா நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்தோம்.
உத்தரவு: கனடா நீதிமன்றமும் இதை வெளிப்படையாகச் சொல்லுமாறு கனடா அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், கனடா அரசு இந்த விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கிறது. அவர் கனடா குடியுரிமை பெற்றுள்ளாரா என்பதையும் சொல்ல மறுக்கிறார்கள். நாடு கடத்தவும் தயாராக இல்லை. அவர்கள் சொல்வது ஒன்றுதான்.. குற்றவாளியை நாடு கடத்த வேண்டும் எனக் கோரும் நாட்டில் மரண தண்டனை இருந்தால், அங்கே நாடு கடத்த முடியாது என்பதை மட்டும் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்" என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications