Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விசித்திரன்".. மீண்டும் ஒரு காதல் கதை.. இந்தியா டூ ஐரோப்பா.. சைக்கிளிலேயே மனைவி கிட்ட சென்ற கணவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2 நாட்களாகவே ஒரு காதல் கதை, இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. யார் இந்த காதல் ஜோடி என்று, நெட்டிசன்கள் வாயடைத்து போய், வாழ்த்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. யார் அவர்கள்?

ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்தது முதல் இன்றைய 2K கிட்ஸ்களின் ஆன்லைன் காதல் வரை, படர்ந்து விரிந்து, காலம் காலமாக நம்முடனேயே பயணித்து வருகிறது காதல்.. ஜீவராசிகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து காட்டுவது, காதல் என்ற உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே..

Beautiful love story and man cycled india to europe to meet swedish wife

பூத்த காதல்: ''காதல்'' இந்த ஒற்றை சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம்... காதலை சொல்லாத இலக்கியம் இல்லை.. காதலை சொல்லாத மொழிகள் இல்லை.. காதலை உணராத உயிர்கள் இல்லை. பூக்கள் மட்டுமல்லாமல், போர்க்களங்களையும் திரண்டு கொண்டதுதான் காதல்.. காதலுக்கு வயது கிடையாது.. மொழி கிடையாது.. இனமும், மதமும் கிடையாது.. தூரங்கள் துளியும் கிடையாது..

ஆம்.. தூரம் அதிகமில்லை என்பது இந்த காதலுக்கும் பொருந்தும் உண்மை.. இதோ ஒரு உண்மை சம்பவம், நம் கண்ணெதிரே நடந்துள்ளது பாருங்கள்.

அந்த பெண்ணின் பெயர் சார்லோட் வான் ஷெட்வின்.. சுவீடன் நாட்டை சேர்ந்தவர்.. 1975-ம் ஆண்டு நம்முடைய டெல்லிக்கு வந்திருந்தார்... அப்போது டெல்லியில் உள்ள, ஆர்ட்ஸ் காலேஜூக்கு சென்றுள்ளார்.. அந்த சமயத்தில், மகாநந்தியா என்பவரை சந்தித்துள்ளார்.. நந்தியா அந்த கல்லூரியின் மாணவர் ஆவார்.

Beautiful love story and man cycled india to europe to meet swedish wife

காதல் மலர்ந்தது: ஏழை மாணவரான நந்தியா, மிகச்சிறந்த ஓவியர்.. அதாவது யாரை பார்த்தாலும், அவர்களது உருவத்தை அச்சு அசல் வரைந்துவிடக்கூடியவராம்.. இதை கேள்விப்பட்டதுமே, ஷெட்வின், நந்தியாவை ஆர்வத்துடன் நேரில் சந்தித்தார்.. தன்னுடைய உருவ படத்தையும், உங்களால் வரைந்து தர முடியுமா? என்று கேட்டார்.. நந்தியாவும், ஷெட்வின் உருவத்தை வரைந்து கொடுத்தார். அந்த ஒரு படத்தை பார்த்ததுமே, ஷெட்வின் அசந்துபோய்விட்டார்.

தன்னையே தத்ரூபமாக வரைந்து தந்த ஓவியத்தை பார்த்ததுமே, நந்திதாவிடம் மனதை பறிகொடுத்துவிட்டார் ஷெட்வின்.. அந்த நிமிடமே இருவருக்கும் இடையே அரும்பியது.. 2 பேருமே தீவிரமாக காதலித்தனர்.. ஆனால், திடீரென ஷெட்வினுக்கு, தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.. அதனால், 2 பேருமே தங்கள் பெற்றோரிடம் விஷயத்தை சொன்னார்கள்.. 2 குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.

காதல் மனைவி: இதற்கு பிறகு, ஷெட்வின் சொந்த நாடு திரும்ப நேர்ந்தது.. அப்போது தன்னுடைய கணவரையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், நந்தியாவுக்கு படிப்பு முடியாமல் இருந்தது.. மேற்படிப்பும் படிக்க வேண்டியும் இருந்தது.. அதனால், படித்து முடித்துவிட்டு, ஸ்வீடன் வந்து சந்திப்பதாக ஷெட்வினிடம் சொன்னார்.. இதற்கு பிறகு ஷெட்வினும், ஸ்வீடன் கிளம்பி சென்றுவிட்டார்.. தம்பதி இருவருமே கடிதங்கள் மூலமாக மட்டுமே பேசிவந்தனர்.. இப்படியே ஒரு வருடம் ஓடியது..

பின்னர், இளம் மனைவி நந்தியாவை சந்திக்க ஷெட்வின் முடிவு செய்தார்.. ஆனால், ஃப்ளைட் டிக்கெட் எடுத்து செல்ல, அவரிடம் போதுமான பணம் இல்லை.. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், தன்னிடம் இருந்த எல்லா பொருட்களையும், கடையில் கொண்டுபோய் விற்றுவிட்டு, ஒரு சைக்கிளை வாங்கினார்.. அந்த சைக்கிளிலேயே ஐரோப்பாவுக்கு மனைவியை பார்க்க கிளம்பினார்.. அதாவது, 1977-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி தன்னுடைய சைக்கிளில் பயணத்தை தொடங்கினார்.

தினமும் 70 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சென்றிருக்கிறார்.. வழியில் செலவுக்கு பணம் தேவைப்படவும், அந்தந்த ஊர் மக்களின் உருவப்படங்களை வரைந்து காட்டி, அவர்களிடமிருந்து கொஞ்சமாக கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, பயணத்தை துவங்குவாராம்.. காதல் மனைவியை இவர் சந்திக்க செல்வதை கேள்விப்பட்டு, பொதுமக்கள் பலர் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்,.

Beautiful love story and man cycled india to europe to meet swedish wife

தொடர் பயணம்: இப்படியே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி என 4 மாதங்கள் பயணம் செய்துள்ளார்.. கடைசியாக, மே 28-ந் தேதி ஐரோப்பாவை அடைந்துவிட்டார்..

அங்கிருந்து ரெயிலில் கோதன்பர்க் சென்றுள்ளார்.. அங்குதான், காதல் மனைவி ஷெட்வின் தங்கியிருக்கிறார்.. ஒருவழியாக தன்னுடைய மனைவியையும் சந்தித்துவிட்டார்.. அங்கு சென்றதுமே, அதிகாரப்பூர்வமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. இப்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இப்போதும், ஒரு ஓவியராகவே வாழ்நாளை கழித்து வருகிறாராம் நந்தியா.

இதை பற்றி நந்தியா சொல்லும்போது, "ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி எனக்கு பெரிசா எதுவும் தெரியாது. இது எனக்கு புதுசு.. ஆனால் அவள் ஒவ்வொரு என்னுடைய நகர்விலும் என்னை ஆதரித்தாள். அவள் ஒரு ஸ்பெஷல் நபர். நான் 1975 இல் இருந்ததைப் போலவே நான் இன்னும் அவளை காதலிக்கிறேன்" என்று பூரித்து சொல்கிறார்.

பூரிப்பு: 1975-ல் மனதில் தோன்றிய காதல், இன்னமும் தொடர்வதாக பூரித்து சொல்கிறார்கள் இருவரும்.. இத்தனை காலம் கழித்துதான், இவர்களின் காதல் கதை வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.. இதைக்கேட்ட நெட்டிசன்கள் அனைவரும் வாயடைத்து போயுள்ளனர்.. இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.. இந்த பூமி இன்றுவரை மாறாமல் உருண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வேராக தாங்கி கொண்டிருப்பதும், இயக்கி கொண்டிருப்பதும் இதுபோன்ற காதலும், தன்னலமற்ற அன்பும்தானே..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+