Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் 2வது விமான நிலையம்.. கைவிரித்த மத்திய அரசு.. அப்போ அவ்வளவு தானா? விமான அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரின் 2வது விமான நிலையம் சார்ந்த எந்த முன்மொழிவும் எங்களுக்கு வரவில்லை என மத்திய அரசு சார்பில் விமான அமைச்சகத்தின் இணையமைச்சர் முரளிதர் மோஹோல் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்ககைளை தொடங்கி உள்ளது.

இதற்கு போட்டியாக கர்நாடகா அரசும் பெங்களூரில் புதிதாக 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு 3 இடங்களை தேர்வு செய்தது. இந்த இடங்களை இந்திய விமான ஆணையத்தின் நிபுணர் குழு கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தது. இந்த அறிக்கையை கர்நாடகா அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் ககலிபுராவில் 4,800 ஏக்கரும், ஹாரேஹள்ளியில் 5,000 ஏக்கரும், குனிகல் ரோட்டில் 5,200 ஏக்கரும் விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு சார்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இடங்களில் சில சவால்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் 2வது விமான நிலையம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூர் மத்திய லோக்சபாவில் தொகுதியின் எம்பியாக இருப்பவர் பிசி மோகன். இவர் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில், ‛‛பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் விவகாரம் எந்த நிலையில் உள்ளது?'' என்பது பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் முரளிதர் மோஹோல் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‛‛கர்நாடக அரசின் கோரிக்கையின் பேரில் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பெங்களூருவில் 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 3 இடங்களில் சாத்தியக்கூறுக்கு முந்தைய ஆய்வுகளை நடத்தியது. பெங்களூரில் சூடஹள்ளி, சோமனஹள்ளி, மாகடி - நெலமங்களா அருகே உள்ள ஒரு இடம் என்று 3 இடங்கள் மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை கர்நாடகா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு புதிய விமான நிலைய கொள்கையின் அடிப்படையில்(GFA Policy) கர்நாடக அரசிடமிருந்தோ அல்லது பிற விமான நிலையம் அமைக்கும் நிறுவனத்திடம் இருந்தோ முன்மொழிவு எதுவும் வரவில்லை. மேலும் மத்திய அரசுக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி தற்போது பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் வரை 150 கிலோமீட்டர் வான்வெளி தூரத்துக்கு எந்தவொரு புதிய விமான நிலையமும் அமைக்கப்படாது. இதில் மைசூரு மற்றும் ஹாசன் உள்ளிட்ட இடங்களில் உள்நாட்டு விமான நிலையங்களை உருவாக்க மட்டுமே விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூரில் 2வது சர்வவேத விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட்டின் ஒப்புதல் அவசியம்'' என்றார். இதனால் பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு கைவிரித்துள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ய 2033ம் ஆண்டு வரை காலம் எடுக்கும். இதனால் அதுவரை 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளையில் இப்போது 2வது சர்வதேச விமான நிலைய பணிகளை தொடங்கினால்.. அதனை முடிக்க 8 ஆண்டு வரை காலம் எடுக்கலாம். இதனால் இப்போது அனுமதி கோரப்பட்டு புதிதாக 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி அதனை 2033ம் ஆண்டில் திறக்கலாம் என்று கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வறிக்கை தொடர்பாக சமீபத்தில் கர்நாடகா உள்கட்டமைப்பு துறை அமைச்சர் எம்பி பட்டீல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‛‛ விமான நிலைய ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும், விமான நிலைய கட்டுமான நிறுவனங்களும் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும். அதன்பிறகு தான் விமான நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் சூடுபிடிக்கும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+