கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ 600 ஆக நிர்ணயம்.. பாரத்பயோடெக் அறிவிப்பு
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியின் விலை அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாரத்பயோக் டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதல் 200 நாடுகளில் பரவியதை அடுத்து அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசியே இதற்கு தீர்வாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதன்படி பாரத் பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்தன. அதேபோல லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் - ஆஸ்டிரஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன. இந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தை இந்தியாவின் சீரம் உற்பத்தி செய்கிறது.
ஆக இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக இரு தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டன. இந்த நிலையில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல்செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையை சீரம் நிறுவனம் தற்போது நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்துக்கு ரூ 400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600க்கும், மத்திய அரசுக்கு ரூ 150க்கும் கொடுக்கவுள்ளதாக சீரம் நிறுவனம் புதிய விலையை அறிவித்துள்ளது. இந்த விலையேற்றத்துக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை பாரத்பயோ டெக் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் விலை ஒரு டோஸ் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ 600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications