டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் வைரசுக்கு எதிரான பெஸ்ட் தடுப்பூசி இந்தியாவின் "கோவாக்சின்?" வெளியான தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின், பாரத் பயோடெக் நிறுவன கோவிட் தடுப்பூசியான 'கோவாக்சின்' கொரோனாவின் ஓமிக்ரான் வகை வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் அதிக அளவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியாக செலுத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கணிசமாக கோவாக்சின் செலுத்தப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சொற்ப அளவில் பயன்பாட்டில் உள்ளது.

கோவாக்சினை பொறுத்தளவில் 30 நாட்களில் 4வது டோசை போட வேண்டும். கோவிஷீல்டு 84 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.

2021ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் எங்கு தெரியும் - என்னென்ன சிறப்பம்சம் 2021ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் எங்கு தெரியும் - என்னென்ன சிறப்பம்சம்

கோவாக்சின் ஃபார்முலா

கோவாக்சின் ஃபார்முலா

இந்த நிலையில்தான், பெயர் தெரிவிக்க விரும்பாத ஐசிஎம்ஆர் அதிகாரி ஒருவர், மேற்கண்ட தகவலை தெரிவித்ததாக, ஹிந்து பிஸினஸ் லைன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கிடைக்கக்கூடிய மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, ​​Omicron க்கு எதிராக கோவாக்சின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Covaxin, தயாரிக்கப்படும் விதம் என்பது கொரோனா வைரசின் டம்மியை உள்ளடக்கியதாகும். அதாவது முழு வைரஸை உடலுக்கு பழக்கப்படுத்தும் வகையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல் திறன் இல்லாத வைரசாக இருக்கும். இதனால்தான் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதில்லை. முழு வைரசும் உடலுக்கு பழக்கப்படுத்தப்படுவதால், எந்த வகை பிறழ்வுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும்.

ஆய்வு செய்ய வேண்டும்

ஆய்வு செய்ய வேண்டும்

ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா போன்ற பிற வகைகளுக்கு எதிராகவும் Covaxin பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது, எனவே புதிய உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். "இது பாதுகாப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் கொரோனா மாதிரிகளைப் பெற்றவுடன், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்ஐவி) தடுப்பூசியின் செயல்திறனைப் பரிசோதிப்போம்" என்று ஐசிஎம்ஆர் அதிகாரி கூறியுள்ளார்.

கோவாக்சின் செயல்பாடு

கோவாக்சின் செயல்பாடு

வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனாவை அடிப்படையாக வைத்து கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது என்றும், மேலும் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், இது மற்ற உருமாற்ற கொரோனாவுக்கு எதிராக செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது என்கிறது ஐசிஎம்ஆர் வட்டாரம்.

வேக்சின் வகைகள்

வேக்சின் வகைகள்

இதனிடையே, வொக்கார்ட் மருத்துவமனையின் மருத்துவர் கேதார் டோராஸ்கர் கூறுகையில், கோவாக்சின், எம்ஆர்என்ஏ ஸ்பைக் புரோட்டின்களை மாடர்னா, ஃபைசர் கட்டுப்படுத்துகிறது, அடினோவெக்டர் எனப்படும், பொதுவான வைரசுக்கு எதிரோன தடுப்பூசிகளாக ஸ்புட்னிக், அஸ்ட்ராஜெனெகா உள்ளன. ஆனால், கோவாக்சின் அனைத்து ஆன்டிஜென்கள் மற்றும் எபிடோப்களை உள்ளடக்கியிருப்பதால், இது ஓமிக்ரானுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது பற்றி, ஆராய்ச்சி மற்றும் சோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.

 கோவாக்சின் சிறப்பு

கோவாக்சின் சிறப்பு

AIIMS தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா அளித்த பேட்டியில், ஓமிக்ரான் ஸ்பைக் புரதப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட உருமாற்றத்தை கொண்டுள்ளது. எனவே தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படும். பெரும்பாலான தடுப்பூசிகள் ஸ்பைக் புரதத்திற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குவதால், ஸ்பைக் புரதப் பகுதியில் பல மாற்றங்கள் நிகழும்போது தடுப்பூசியின் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும், என்று தெரிவித்தார். அப்படி பார்த்தால், ஸ்பைக் புரதத்தை மட்டுமே குறிவைக்காமல் மொத்த கொரோனா வடிவத்தை உடலுக்கு அறிமுகப்படுத்தும் கோவாக்சின் சிறப்பானதாக இருக்கும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

English summary
Bharat Biotech’s Covid vaccine ‘Covaxin’ may be more effective against the highly-mutating Omicron variant which emerged this past week, an Indian Council of Medical Research (ICMR) officer has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X