மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
டெல்லி: கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து வழங்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
2019-ம் ஆண்டு உலகை ஆட்டுவிக்க தொடங்கிய கொரோனா தொற்றுப் பரவல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நமது நாட்டில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் 4,417 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52,336; நேற்று மட்டும் 6,032 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.20 சதவீதம் ஆகும்.
கொரோனா தடுப்பூசியானது 2 தவணைகளாகப் போடப்படுகின்றன. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 213.72 கோடிக்கும் அதிகமாக அதாவது 2,13,72,68,615 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசியானது கடந்த மார்ச் மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.04 கோடிக்கும் அதிகமான அதாவது 4,04,84,204 இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவால் குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதமாக உள்ளது. கொரோனா காலத்தில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,86,496.
நமது நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகையில், நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு நாசி மூலம் செலுத்தும் தடுப்பு மருந்து தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை முன்பை கிளைன்மார்க் நிறுவனம், கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. மூக்கு வழியேயான இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம். இதை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய இந்திய பொதுமருந்து கட்டுப்பாட்டு மற்றும் முறைப்படுத்துதல் ஜெனரல் அனுமதி வழங்கி இருந்தது.
தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications