காஷ்மீர், லடாக் ராணுவ போர்க்களத்துக்கு இனி சுற்றுலா போகலாம்! பாரத் ரன்பூமி தர்ஷன் திட்டம் அறிமுகம்
டெல்லி: அண்டை நாடான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் இடையே எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இந்த எல்லை பகுதியில் போர், இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதிய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் தான் மத்திய அரசு ‛பாரத் ரன்பூமி தர்ஷன்' எனும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் நம் நாட்டு ராணுவ வீரர்கள் போர்புரிந்த இடங்களை சுற்றி பார்க்கலாம்.
நம் நாட்டுடன் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எல்லையை பகிர்ந்து வருகின்றன. இருநாடுகளை பிரிக்கும் வகையில் எல்லையில் எல்லைக்கட்டுப்பாடு கோடு உள்ளது. ஆனாலும் கூட சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி நம் நாட்டின் நிலப்பரப்புக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.

சீனா அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. அதேபோல் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கோருகிறது. அதோடு சுதந்திரம் அடைந்தது முதல் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் நம்முடன் எல்லையில் மோதலை கடைப்பிடித்து வருகின்றன.
இந்த மோதல் என்பது போராக கூட மாறி உள்ளது. இருநாடுகளுக்கு எதிராக நம் நாட்டு ராணுவ வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே மோதி உள்ளனர். அதாவது 1962ல் இந்தியா - சீனா போர் நடந்தது. இந்த போர் என்பது சிக்கிம் மாநிலம் நாது லா என்ற இடத்தில் நடந்தது. அதன்பிறகு 1971ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தின் அருகே லாங்கிவாலாவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்கும் வகையில் இந்த போர் என்பது நடந்தது.
இதுதவிர பல சந்தர்ப்பங்களில் எல்லையில் நம் நாட்டு வீரர்களின் துணிச்சலுடன் மோதி சீனா, பாகிஸ்தானை விரட்டியடித்துள்ளனர்.
கடந்த 2017 ல் இந்தியா, சீனா, பூடான் எல்லையில் உள்ள டோக்லாமில் இந்தியா - சீனா இடையே மோதல் றே்பட்டது. கடந்த 2020 ஜுன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நம் நாட்டு வீரர்களுக்கும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நம் நாட்டின் 20 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த இடங்களுக்கு எல்லாம் பொதுமக்கள் செல்ல அனுமதி என்பது இல்லை.
இந்நிலையில் தான் டோக்லாம், கல்வான் உள்பட இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா எல்லையில் உள்ள போர்க்களங்களை மக்கள் பார்க்கும் வகையில் பாரத் ரன்பூமி தர்ஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது.
இதற்கான இணையதளம் மற்றும் செயலியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்துள்ளது. நம் நாட்டின் 77 வது ராணுவ தினத்தை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் எல்லையோரத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 77 போர்க்களங்களின் போட்டோக்கள், அதுபற்றிய தகவல்கள் இடம்பெற்று இருக்கும். மேலும் அங்கு செல்வதற்கான வழிகள் பற்றிய விபரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: பாரத் ரன்பூமி தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த எல்லையோர பகுதிகளை பொதுமக்கள் சுற்றுலா செல்லலாம். அதன்படி டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கு, டிராஸ், கார்கில், சியாச்சின் பேஸ் கேம் லாங்கிவாலா (ராஜஸ்தான்), அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பும் லா மற்றும் கிபிடு உள்ளிட்ட 77 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்துமே பாகிஸ்தான், சீனா எல்லையில் நம் நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்குள் இருப்பவையாகும்.
இந்த பாரத் ரன்பூமி தர்ஷன் இணையதளம் என்பது ‛ஒன் ஸ்டாப்' வகையில் செயல்படும். அதாவது இந்த இடங்களுக்கு மக்கள் எப்படி செல்வது என்பது பற்றிய விபரங்களை வழங்குவதுடன், அந்த இடங்களுக்கு எப்படி அனுமதி பெற வேண்டும். பயண திட்டத்தை எப்படி வகுக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் மற்றும் ஆபரேஷன் நடக்கும் இடங்களை பொதுமக்கள் நெருங்கி செல்ல முடியாது. ஆனாலும் அந்த இடங்களுக்கு அருகே சென்று போர்களம் எப்படி இருக்கிறது? அங்கு நிலவும் காலநிலை, சூழலை அறிந்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் நம் நாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்யும் தியாக உணர்வை மக்கள் நேரடியாக உணர முடியும். இது இந்திய ராணுவத்தின் மீதான மதிப்பை உயர்த்துவதோடு, பலருக்கும் ராணுவத்தில் பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இதனால் தான் இந்த பாரத் ரன்பூமி தர்ஷன் திட்டம் என்பது தொடங்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications