அரசு ஊழியர்களுக்கு வந்த பெரிய அறிவிப்பு.. ஆதார் + பயோமெட்ரிக்.. மத்திய அரசின் புதிய விதிகள் என்ன?
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவை சரியாக கண்காணிக்கும்பொருட்டு, முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் எச்சரிக்கை பறந்துள்ளது.
சமீபகாலமாகவே, மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன..

அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல கணக்கு காட்டுவது, சாயங்காலம் டியூட்டி முடியும்முன்பாகவே, வீட்டிற்கு கிளம்பிவிடுவது இப்படி ஏகப்பட்ட புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
வருகைப்பதிவேடு: அதைவிட முக்கியமாக, வருகைக்கான ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் அமைப்பின் (ABEAS), ஏராளமான அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதில்லை என்ற புகாரும் கிளம்பியது.. இப்போது இதற்கெல்லாம்தான், மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது.
மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதனை சரிபார்க்கும் நோக்கில் பயோமெட்ரிக் வருகை பதிவினை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டு: அதாவது, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப்பதிவு செய்யப்படும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.. ஊழியர்கள் எந்தவிதமான சாக்குபோக்கும் கூறாமல் ABAAS ஐப் பயன்படுத்தி தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், "துறைத் தலைவர்கள் (எச்.ஓ.டி.) பணியாளர் வருகையை அதாவது அடெண்டன்சை அடிக்கடி கண்காணித்து, சரியான பணி நேரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.. பணியாளர்கள் சரியான வேலை நேரத்தை கடைபிடிப்பதையும், தாமதமாக வருவதை தவிர்ப்பதையும் கண்காணித்து பணியாளர்களை கவனித்து கொள்ள வேண்டும்.
அதிரடி நடவடிக்கை: தாமதமாக வருவதையும், அலுவலக நேரம் முடியும் முன்பே கிளம்பி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கும் ஊழியர்களின் நடவடிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய ஊழியர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, "பணியின்போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும்" என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் என்றும், வரும் காலங்களில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த விதியை செயல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications