"தோளோடு தோள்".. இந்தியா - இலங்கை இடையே பாலம் வருகிறதா? வாவ் பெட்ரோலிய குழாய் இணைப்பு.. தழைக்கும் உறவு
டெல்லி: இலங்கை - இந்தியா இடையே பாலம் கட்டுவது குறித்து ஆய்வு நடத்தவும், நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் படகு போக்குவரத்து தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த வருடம் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது... பொதுமக்களின் ஆவேச போராட்டத்தால் அதிபராக இருந்த ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார்..

பொருளாதார நெருக்கடி: இதற்கு பிறகு, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.. ஆனால், அவர் பதவியேற்ற நேரம், மிக மோசன பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருந்தது. இதனால், தன்னுடைய எப்படியாவது மீட்க வேண்டும் என்பதற்காக, இந்திய அரசிடமும் இலங்கை உதவிகேட்டது...
இந்தியாவும் உடனே, பல கோடி ரூபாய் கடனுதவியை ஓடோடி சென்று வழங்கியது. குறிப்பாக, எரிபொருள், உணவுப்பொருள் இப்படி உதவிகளை இந்தியா வழங்கியது.. இதுபோக, மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் இங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.. இப்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வந்துள்ளார்.
அரசுமுறைப்பயணம்: பதவியேற்று இப்போதுதான் அவர், முதன்முறையாக அரசுமுறைப்பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.. அவருடன், இந்தியா - இலங்கை இடையிலான தூதரக உறவு 75-வது ஆண்டை எட்டிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இலங்கை அதிபரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதலில் தன்னுடைய வாழ்த்தை சொன்னார் பிரதமர் மோடி.. இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பிறகு இரு நாட்டு பிரச்சனைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டன.. ஆலோசிக்கப்பட்டன.. பகிர்ந்து கொள்ளப்பட்டன!!
பிரதமர் அப்போது பேசும்போது, இந்தியா - இலங்கையின் நலன்களும், வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. அதனால், பாதுகாப்பு மற்றும்உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.
தொலைநோக்கு: பொருளாதார கூட்டாண்மைக்கான தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், 2 நாட்டு மக்கள் இடையே கடல், வான், எரிசக்தி தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பையும் நாம் அதிகரிக்க வேண்டும் என்றார்.
அதேபோல, இந்தியா - இலங்கை இடையே விமான சேவையை மேம்படுத்த இந்த பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறை இடையே படகு சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. மற்றொருபக்கம், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறையை இலங்கையில் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தமும் சூட்டோடு சூடாக கையெழுத்தானது.
மீனவர்கள்: மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றின பிரச்சனையும் இரு தரப்பிலும் பேசப்பட்டது.. இந்த பிரச்சினைகளில் 2 நாடுகளும் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தினை இரு தருப்பும் முன்வைத்தது.. அப்போது, தமிழர் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுவதுடன் அமைதிக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோலிய குழாய்: அதுமட்டுமல்ல, ரூ.75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் என்பதையும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார். அதுமட்டுமல்ல, பெட்ரோலிய குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது இந்து கூட்டத்தின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரதமர் சொல்லும்போது, "இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ஒரு நெருங்கிய நண்பனாக இந்தியா, அந்த நாட்டு மக்களுடன் தோளோடு தோள் நின்று உதவியது. இந்தியா-இலங்கை இடையே பெட்ரோலிய குழாய் இணைப்புக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்தப்படும். அத்துடன் இருநாடுகள் இடையே தரைப்பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறு பற்றியும் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
எதிர்பார்ப்பு: இதைப்போல தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இப்படி பல்வேறு விவகாரங்களும் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் 2 நாடுகளுக்கும் இடையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications