"டம் டம் சத்தம், சீட்டுக்கு அடியில் விழுந்துட்டோம்.. சிதறிய உடல்கள்: ரயிலில் பயணித்தவர்கள் அதிர்ச்சி
டெல்லி: ஒடிசா ரயில் விபத்தின்போது, பயங்கர சத்தம் ஏற்பட்டதாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டதாகவும், உயிர்தப்பி வந்த பயணிகள் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது..

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து: இதனிடையே, இந்த ரயில் விபத்தில் உயிர்பிழைத்தவர்கள், விபத்து குறித்தும், தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்தும் பேட்டிகளாக தந்து வருகிறார்கள்.. அந்தவகையில், NDRF வீரர் ஒருவரும் இதில் பயணித்துள்ளார்.. இந்த விபத்து குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்..
அதில், "நான் தனியாகதான் இந்த ரயிலில் வந்தேன்.. விடுமுறை என்பதால், கொல்கத்தாவில் இருந்து ரயிலில் கிளம்பினேன்.. சரியாக 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.. நான் அப்போது சீட்டில் உட்கார்ந்திருந்தேன்.. திடீர்னு டம்-ன்னு ஒரு சத்தம் கேட்டது.. அப்பறம் திடீர்னு ரயில், அப்படியே தரையில் இறங்கினி மாதிரி தெரிந்தது.. அதுக்கப்பறம் மறுபடியும் டம், டம்ன்னு சத்தம் கேட்டது.. ஒவ்வொரு பெட்டியாக நொறுங்கி கொண்டே வந்திருக்கிறது.
இதனால், எல்லாருமே உள்ளேயே விழுந்துட்டோம்.. சீட்டுக்கு அடியில் விழுந்துட்டோம்.. நான் B7-ல் இருந்தேன்.. B6 வரை எல்லாமே நொறுங்கிவிழுந்துவிட்டது. எங்க பெட்டிக்கு ஒன்னும் ஆகல.. கீழே விழுந்த நாங்கள் எல்லாருமே கேட் ஓபன் பண்ணி உடனே வெளியே வந்துட்டோம்.. நான் மீட்பு பணியை சேர்ந்தவன் என்பவதால், உடனடியாக எங்க டீமுக்கு போன் போட்டு சொன்னேன்..
மீட்பு பணி: அதற்குள் பலரும் மீட்பு பணியில் இறங்கிவிட்டனர்.. நானும் அவர்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் இறங்கினேன்.. 7.30-க்குள் எங்க மீட்பு படையினர் வந்தனர்.. பிறகு, 10மணிக்குள் மொத்த டீமும் வந்துவிட்டனர்.. ஏசியில் இருந்தவர்களுக்கு அதிகம் சேதம் இல்லை.. தற்காலிக மெடிக்கல் டீம் அங்கேயே துவங்கப்பட்டுவிட்டது. மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு உள்ளது..
மீட்பு பணியிலேயே 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உள்ளனர்.. உயிர் பிழைத்தவர்களுக்கு, இரவு ரயில் நிலையித்திலேயே இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, உணவும் வழங்கப்பட்டது. இதற்கு பிறகு, ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களை, தமிழகம் அழைத்துச்செல்லவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.
பயங்கர சத்தம்: விபத்து நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸில், ராதாகிருஷ்ணன் என்பவர் பயணித்துள்ளார்.. இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்..
இவர் விபத்து குறித்து சொல்லும்போது, "நான் ராணுவத்தில் பணியாற்றியவன்.. ஏசி கோச்சில் வந்தோம்.. நாங்கள் வந்த பெட்டியில் அவ்வளவாக பாதிப்பு இல்லை.. B1 முதல் எல்லாமே நொறுங்கிவிட்டது.. இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க காரணம், சிக்னல் கோளாறுதான்.. 3 ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதும் என்பது இதுவரை நடந்த சம்பவம் கிடையாது.. சிக்னல் பிரச்சனைதான் இது..

நிறைய பேர் உடல்கள் பெட்டிகளில் மாட்டிக் கொண்டுவிட்டது.. எங்கள் கண்முன்னாடியே அவர்கள் சிக்கியிருந்தார்கள்.. வயதானவர்கள்,குழந்தைகள் எல்லாருமே இருந்தார்கள்.. இந்த விபத்து நடந்தபோது, நான் செல்போன் பார்த்து கொண்டிருந்தேன்.. அப்போதுதான் டம்னு சத்தம் கேட்டது.. வெடிவிபத்தைவிட பயங்கரமான சத்தமாக அது இருந்தது. பெட்டிகள் எல்லாமே நொறுங்கிவிட்டதால், யாரையுமே மீட்க முடியாத சூழல் அந்த நேரத்தில் இருந்தது..
கோரிக்கை: விபத்து நடந்த பகுதி ஒரு கிராம பகுதி.. தமிழக மக்கள் நிறைய பேர் அந்த ரயிலில் இருக்கிறார்கள்.. 200 -க்கும்மேற்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தனர்.. இதில், மொழி தெரியாத மக்களும் இருக்கிறார்கள்.. அவர்களையும் மீட்டு வந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்.. தமிழக அரசுக்கு கோரிக்கையாக இதை முன்வைக்கிறேன்" என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications