பீகார் தேர்தல்...பாஜகவின் முதல் லிஸ்டில் ஷூட்டர் ஸ்ரேயாஸி சிங் உள்பட 27 பேர் பெயர் அறிவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து இருக்கும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் அந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் துவங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்,பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு எதிராக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இவர்களுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது.

Bihar Elections 2020: Bharatiya Janata Party releases the first list of 27 candidates

மெகா கூட்டணியில் மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 19 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதையடுத்து, பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும், 121 தொகுதிகளிலும் பாஜகவும் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனதா தளம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில், லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் தலைவரும், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்துடன் சிக்கல் ஏற்பட்டதால் தனித்து போட்டியிட பஸ்வான் முடிவு செய்து இருக்கிறார்.

Bihar Elections 2020: Bharatiya Janata Party releases the first list of 27 candidates

இந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 27 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முக்கிய வேட்பாளராக சமீபத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அந்தக் கட்சியில் சேர்ந்த இருந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் ஜமுய் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+