தங்கம், பணம், நகை தர முடியலையா? கிட்னியை தானமாக கேட்ட மாமியார்.. மருமகள் தந்த ட்விஸ்ட்
டெல்லி: இன்றைக்கு வரதட்சணையாக தங்க நகை, கார், பைக், வீடு, நிலம், பாத்திரங்கள், கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அப்பார்ட்மெண்ட் என்று கேட்கிறார்கள். ஆனால் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. மாமியார் ஒருவர், தனது மருமகளிடம் பைக், பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கிடைக்காததால், சிறுநீரகத்தை நோய்வாய்ப்பட்ட மகனுக்கு தானம் செய்யுமாறு கேட்டுள்ளார். இதை கேட்ட மருமகள் என்ன செய்தார் என்பதை பாருங்கள்
வரதட்சணை கேட்பது குற்றம் என்பது சட்டத்தில் நடைமுறையில் இருந்தாலும், பெண்களை கட்டிக்கொடுக்கும் போது, வரதட்சணை கொடுக்காத பெண் வீட்டார்களை பார்க்கவே முடியாது. சீதனமாக தாங்களே விருப்பப்பட்டு மகள்களுக்கு பெற்றோர் பணம், நகை மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பார்கள். ஆனால் அதேநேரம் பெண் வீட்டார் தாங்களாக முன் வந்து தருவதை தாண்டி, இத்தனை பவுன் தங்கம் தர வேண்டும்.. கார், பைக், வீடு, நிலம், பாத்திரங்கள், கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அப்பார்ட்மெண்ட் என கேட்பது இன்றும் நடக்கிறது.

பீகாரில் வினோதம்
அப்படித்தான் பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அவரது மாமியார் வரதட்சணையாக பைக், நகை, பணம் கேட்டுள்ளார். அதனை அவரால் தர முடியவில்லை. இதனால் இரண்டு வருடமாக நோய் வாய்ப்பட்டுள்ள மகனுக்கு கிட்னியை வரதட்சணையாக கேட்டிருக்கிறார் அவரது மாமியார்.
காவல் நிலையத்தில் தீப்தி புகார்
முதலில் விளையாட்டாக நினைத்த அவரிடம், மீண்டும் மீண்டும் கேட்ட மாமியார், அடித்து துன்புறுத்தினாராம். ஒரு கட்டத்தில் வரதட்சணையாக கிட்னியை தானம் செய்யாத காரணத்தால் வீட்டை விட்ட மாமியார் துரத்திவிட்டுள்ளாராம். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் தீப்தி முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தனது நிலைமை குறித்து புகார் அளித்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகாரில் தீப்தி கூறுகையில், கடந்த 2021ம் ஆண்டில் எனக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு முசாபர்பூரில் உள்ள போச்சாஹா பகுதியில் எனது மாமியார் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் மிதன்பூரில் வேலை செய்தபடி வசித்து வந்தார்.
கணவனுக்கு உடல்நலக்குறைவு
திருமணமான சில ஆண்டுகளில் எனக்கும் என் மாமியாருக்கும் இடையே எந்த பிரச்சனையும் வரவில்லை.. ஆனால் போகப்போக எனது மாமியார் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். என்னுடைய பெற்றோர் வீட்டிலிருந்து ஒரு பைக் மற்றும் பணத்தைப் பெறும்படி கட்டாயப்படுத்தியபடி இருந்தார். நான் வாங்கிவர மறுப்பு தெரிவித்துவிட்டேன்.. ஒரு கட்டத்தில் எனது மாமியார் என்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை நோய் வாய்ப்பட்ட எனது கணவருக்கு தானம் செய்யுமாறு வற்புறுத்தத் தொடங்கினர்.
கிட்னி தானமாக கேட்ட மாமியார்
எங்களுக்கு திருமணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான் என் கணவரின் சிறுநீரகக் கோளாறு பற்றி எனக்குத் தெரியவந்தது. ஆனால் எனது கணவருக்கு திருமணத்திற்கு முன்பே கிட்னி பிரச்சனை இருந்துள்ளது. அந்த பிரச்சனை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஆரம்பத்தில், என் மாமியார் என்னிடம் கிட்னி கேட்ட போது, நான் அவரது கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் என் மாமியாரும் கணவரும் கிட்னியை தானமாக தந்தே ஆகவேண்டும் என்று எனக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். நான் அவர்களின் கட்டாயத்திற்கு மறுத்ததால் என்னை அடித்து வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டார்கள்" இவ்வாறு புகாரில் கூறினார்.
மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு
இதனிடையே சம்பவம் குறித்து தீப்தி புகார் அளித்ததுமே மகளிர் போலீசார் பெண் வீட்டாரையும், மாமியார் வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் தீப்தி கிட்னி தர மறுத்துவிட்டார். அவர்களுமே தங்கள் நிலையில் இருந்து மாற மறுத்திருக்கிறார்கள். இதையடுத்து தீப்தி தனது கணவரிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அவரது கணவர், தீப்திக்கு விவாகரத்து தர மறுத்துவிட்டார். இதையடுத்து தான் தீப்தி மீண்டும் புகார் அளிக்கவே மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது கணவர் உட்பட அவரது மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசாபர்பூர் எஸ்பி விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களில் செய்திகள் வெளியான நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக முசாபர்பூர் எஸ்பி (ஊரகம்) வித்யாசாகர் தெரிவித்தார். விசாரணை நடத்தும் அதிகாரியிடம் இந்த விஷயத்தில் என்ன நடந்தது. உண்மை என்ன என்பது குறித்து ஆராய்ந்து வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளதாக தொலைபேசியில் செய்தியாளர் ஒருவரிடம் வித்யாசாகர் ஐபிஎஸ் கூறினார். பீகாரில் வரதட்சணை தடைசெய்யப்பட்டிருக்கிறது. வரதட்சணை கேட்கப்படும் எந்த திருமண விழாவிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதல்வர் நிதிஷ் குமார் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications