வாஜ்பாய்க்கும் வார்டன் மனைவிக்கும் பெண் குழந்தை பிறந்ததாம்.. அபிஷேக் சவுத்ரி புத்தகத்தால் சர்ச்சை
டெல்லி: நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிரம்மச்சாரி என கூறப்பட்டாலும் அவருக்கும் டெல்லி கல்லூரி விடுதி ஒன்றின் வார்டனாக பணிபுரிந்தவரின் மனைவிக்கும் திருமணம் கடந்த உறவு இருந்தது; இந்த உறவின் மூலம் நமீதா என்ற பெண் குழந்தை பிறந்தது என Vajpayee: The Ascent of the Hindu Right 1924-1977 என்ற புத்தகத்தில் நூலாசிரியர் Abhishek Choudhary பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக தி வயர் உள்ளிட்ட தளங்களில் பதிவான செய்திகளின் சாராம்சம்: டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி ஆண்கள் விடுதியின் வார்டனாக இருந்தவர் பிரிஜன் கவுல். இவரது மனைவி ராஜ்குமாரி கவுல். கணவருடனும் வாஜ்பாயுடன் திருமணத்தை தாண்டியதான உறவை கொண்டிருந்தவராகவும் இருந்தார் ராஜ்குமாரி கவுல். 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாஜ்பாய்- ராஜ்குமாரி கவுலுக்கு நமீதா என்ற பெண் குழந்தை பிறந்தது. வார்டனின் மகளாக அறியப்பட்டாலும் அவரது முகம் வாஜ்பாயை பிரதிபலித்தது. ஆகையால் நமீதா தம்மை அதிகாரப்பூர்வமாக அப்பா என அழைப்பதை தவிர்க்க விரும்பினார். நமீதாவும் வாஜ்பாயை பாப் ஜி என்றுதான் அழைத்தார்.
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் வாஜ்பாயின் தனி மனித வாழ்வு பற்றி பேசும்போது அதிருப்தி அடையக் கூடும். மகாத்மா காந்தி படுகொலையை அப்படி ஒன்றும் பேரிழப்பாக வாஜ்பாய் கருதவில்லை. மகாத்மா காந்தியை இந்திய பிரிவினைக்கு காரணமானவராக வாஜ்பாய் பல கட்டுரைகளை திருத்தி எழுதியதிருந்தார்... இது மகாத்மா காந்தியின் படுகொலைக்கும் காரணமாக இருந்தது. இவ்வாறு அவற்றில் எழுதப்பட்டுள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தியது. அதனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் திருமணம் செய்யாமல் இருந்தனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை முன்வைத்து திருமணம் கடந்த உறவு, பாலுறவு சர்ச்சைகள் அன்று முதல் அண்மைக்காலமாக மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகம் வரை தொடர்ந்ட்து கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.











Click it and Unblock the Notifications