பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி.. ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து காங்கிரஸ் மீது பாஜக கடும் தாக்கு
டெல்லி: ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய அறிக்கை பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இது இந்திய பொருளாதாரத்திற்கும், மத்திய அரசுக்கும் எதிரான சதி என்று பாஜக விமர்சித்துள்ளது. மட்டுமல்லாது இவையனைத்தும் காங்கிரஸின் திட்டம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை மேற்கோளிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான 'செபி' விசாரணையில் இறங்கியது. ஆனால், அதானி நிறுவனம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று செபி, கூறிவிட்டது. இப்படியான ஹிண்டன்பர்க் அறிக்கையின் சலசலப்புகள் ஓய்ந்தன.
ஆனால், ஹிண்டன்பர்க்கோ இத்துடன் நின்றுவிடாமல் செபி-அதானி உறவு குறித்து அறிக்கையை வெளியிட்டது. "எங்களது ஆய்வில் குறிப்பிட்ட அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க செபி விரும்பவில்லை. அதாவது இந்தியா இன்போலைனின் "இ.எம். ரீசர்ஜண்ட் பண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்" நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு செபியின் தலைவர் மாதவி பூரி புச், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதியைப் பயன்படுத்துவதில் உடந்தை யாக இருப்பது காரணமாக இருக்கலாம். அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனம் ஒன்றில், செபியின் தலைவராக இருக்கும் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார்" என்று செபி மீது குண்டை வீசியது.
இதனையடுத்து இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத்,
"நமது நிதிச் சந்தைகளை இழிவுபடுத்தவும், சீர்குலைக்கவும் மற்றும் நாட்டில் குழப்பத்தை உருவாக்கவும் வெளிநாட்டு உதவியை காங்கிரஸ் நாடுகிறது. தேர்தலில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் தொல்வியடைந்த நிலையில், காங்கிரஸும் அதன் நெருங்கிய 'டூல்கிட்' கூட்டாளிகளும் இப்போது இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயல்கின்றனர். இது இந்தியாவின் மீதான வெறுப்பு.
சனிக்கிழமை அறிக்கை வெளியானது. ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகள் இதனை தீவிரமாக எழுப்பினர். ஆனால் இறுதியில் பங்குச்சந்தை வெற்றிபெரும். இந்திய பங்குச் சந்தை இன்று நிலையாக உள்ளது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சிறு முதலீட்டாளர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்த ஹிண்டன்பர்க்-க்கு செபி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்ததா? ஆனால் இப்போது மற்றொரு குற்றச்சாட்டை தூக்கிக்கொண்டு வருகிறது.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருகிறது. அவர்கள் இந்தியாவின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் செழிப்பதை அவர்கள் விரும்பவில்லை. காங்கிரஸும் அதன் தலைமையும் ஒரு கற்பனையான அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்று வருகிறது" என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications