பாஜக திடீர் சர்ப்ரைஸ்.. வெளியான வேட்பாளர் லிஸ்ட்.. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இப்படியொரு பிளானா?
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கும் முன்பே பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில் 21 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 39 இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்ததன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
பாஜகவின் மத்திய தேர்தல் குழு கடந்த புதன்கிழமை அன்று சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எப்படி தேர்தலை எதிர்கொள்ளலாம் என ஆய்வு செய்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நடந்து முடிந்த மறு நாள், சத்தீஸ்கரில் 21 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 39 இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்தால் கட்சியில் என்ன சிக்கல் உள்ளது, பிரச்சனைகள் என்ன வருகிறது என்பதை அறிய முடியும் என்பதால் இந்த யுக்தியை பாஜக கையாண்டு உள்ளது. அதனால் தான் எந்த கட்சியும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடாத நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல் ஆளாக வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட போதிய நேரம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
2018 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக மோசமாக தோற்றது. மொத்தம் உள்ள, 90 சட்டமன்றத் தொகுதிகளில் 15 இல் மட்டுமே வெற்றி பெற்றது, காங்கிரஸ் 68 இடங்களில் வென்றது. அதேபோல் அதே 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடந்துது. மொத்தம் உள்ள 230 தொகுதியில் காங்கிரஸின் 114 இடங்களை வென்றது. பாஜக 109 இடங்களை வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அங்கு முதலில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைத்தது. ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக விலகியதால் மட்டுமே, 2020 ஆம் ஆண்டில் பாஜக மத்திய பிரதேசத்தில் அமைக்க முடிந்தது.
எனவே பாஜக தேசிய தலைமை இந்த முறை சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் கவனமாக கையாள விரும்புகிறது. கர்நாடகா தேர்தல் தோல்வி அந்த கட்சிக்கு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. எனவே டெல்லியில் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளை ஏபிசிடி என நான்கு வகைகளாக பிரித்து களம் இறங்க வேலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏ வகை என்பது கடந்த தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் ஆகும். அதே சமயம் 'பி' வகை என்பது வெற்றி தோல்வி சம அளவுள்ள இடங்கள் ஆகும். 'சி' பிரிவு என்பது பாஜக வெற்றி வாய்ப்பு பலவீனமாக உள்ள இடங்கள் ஆகும். டி பிரிவு என்பது பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதிகள் ஆகும். 'சி' மற்றும் 'டி' பிரிவில் உள்ள தொகுதிகளில் மிக அதிக கவனம் செலுத்தவும், தனி வியூகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது உள்ள நிலை குறித்து பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜக மேலிடம் எடுத்த உள் ஆய்வுகளின் படி, மத்தியப் பிரதேசத்தில் 40 சதவீத பாஜக எம்எல்ஏக்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று தகவல் வந்துள்ளதாம்.
இதேபோல் 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபையில் "30-32 இடங்கள்" மட்டுமே பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது.இதுதான் பாஜக மேலிடத்தை கவலை கொள்ள வைத்துள்ளது.கர்நாடகாவை போல் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸை வெற்றி பெறவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கான பாஜகவின் முதல் வேட்பாளர் ட்டியலில் ஐந்து பெண்கள், பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 பேர், பட்டியல் சாதியினர் பிரிவில் ஒருவர் இடம் பெற்றுள்ளனர் . மத்திய பிரதேசத்தில் ஐந்து பெண்கள், பட்டியல் சாதியினர் 8 பேர் , பழங்குடியினர் 13 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications