அடேங்கப்பா இத்தனை பேரா? உ.பி.உள்ளிட்ட 5 மாநில தேர்தல்...பாஜக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான மிகப் பெரிய டீமை களமிறக்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அதேபோல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. இன்று அறிவித்துள்ளது. உ.பி.க்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும் அவருடன் 7 இணை பொறுப்பாளர்கள், 6 மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட், மணிப்பூர்

உத்தரகாண்ட், மணிப்பூர்

உத்தரகாண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், லோக்சபா எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி ஆகியோர் இணை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங், மீனாக்‌ஷி லெகி, லோக்சபா எம்.பி. வினோத் சாவ்தா ஆகியோர் பஞ்சாப் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக பூபேந்திர யாதவ், மத்திய அமைச்சர் பிரதிமா பெளமுய்க், அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கா ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா மாநில பொறுப்பாளராகவும் மத்திய அமைச்சர்கள் தர்ஷனா ஜர்தோஷ், கிஷண் ரெட்டி ஆகியோர் இணை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி. பொறுப்பாளர்கள்

உ.பி. பொறுப்பாளர்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மிகப் பெரிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது பாஜக. அதனால்தான் இத்தனை பொறுப்பாளர்களை களமிறக்கிவிட்டிருக்கிறது அந்த கட்சி. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் மத்திய அமைச்சர்கள் அனுராத் தாக்கூர், அர்ஜூன் ராம் மெக்வால், ஷோபா கரந்தலஜெ, அன்னபூர்னா தேவி, ராஜ்யசபா எம்.பி.க்கள் சரோஜ் பாண்டே, விவேக் தாக்கூர், ஹரியானா முன்னாள் அமைச்சர் கேப்டன் அபிமன்யு ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உ.பி.யை 6 மண்டலங்களாகப் பிரித்து அவற்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்கு பிராந்தியத்தை பிராஜ், ஆவாத், கான்பூர், கோரக்பூர், காசி என மண்டலங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்னால் எம்.பி. சஞ்சய் பாட்டியா, பீகார் எம்.எல்.ஏ. சஞ்சீவ் செளராசியா, தேசிய செயலாளர்கள் சத்யகுமார், அரவிந்த் மேனன், சுனில் அரோரா, சுதிர் குப்தா, ராதா மோகன்சிங் ஆகியோர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவுக்கு சவால்

பாஜகவுக்கு சவால்

பாஜகவின் இந்த நியமனங்களும் கூட ஜாதிய அடிப்படையிலானதாகவே இருக்கிறது. உதாரணமாக 7 இணை பொறுப்பாளர்களில் மெக்வால் தலித், அனுராக்- தாக்கூர், அபிமன்யு- ஜாட், அன்னபூர்னா தேவி ஓபிசி, விவேக்- பூமிகார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் கல்யாண்சிங் கை ஓங்கியிருந்த காலத்தில் பிரமோத் மகாஜன்தான் பாஜகவை தோளில் தூக்கி சுமந்தவர். அத்தனை தேர்தல்களுக்கும் வியூகம் வகுத்து செயல்பட்டவர். இப்போது அந்த பொறுப்பு தர்மேந்திர பிரதானுக்கு வந்திருக்கிறது. அதுவும் உ.பி.யில் பாஜக நிறைய சவால்களை எதிர்கொள்ளும் தருணம் இது. கொரோனா 2-வது அலையை சரியாக கையாளாதது, விவசாயிகள் போராட்டம், வேலைவாய்ப்பின்மை ஆகியவைதான் பாஜகவுக்கு சிக்கல். இந்த பிரச்சனைகளால் பாஜகவின் வாக்கு வங்கி மடைமாறுகிற அபாயகரமான நிலைதான் உள்ளது. தர்மேந்திர பிரதான், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர். ஏற்கனவே பீகார், உத்தரகாண்ட், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக அனுபவம் பெற்றவர்.

மாநிலங்களில் பாஜக நிலை

மாநிலங்களில் பாஜக நிலை

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு மிக நெருக்கடியான மாநிலம். அதனாலேயே மாநில முதல்வர்களை அடுத்தடுத்து மாற்றி இருக்கிறது. உத்தரகாண்ட் தேர்தலில் டெல்லி விவசாயிகள் போராட்டம் நிச்சயம் எதிரொலிக்கும். பஞ்சாப் மாநிலும் பாஜகவுக்கு சிக்கலான ஒன்றுதான். பல்லாண்டுகால கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தள் இம்முறை குட்பை சொல்லிவிட்டது. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதள், ஆம் ஆத்மி அதற்கு அடுத்ததுதான் பாஜக என்கிற நிலை உள்ளன. கோவாவில் பாஜகவுக்கு சாதகமான நிலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. மணிப்பூரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவியவர்களை வைத்துதான் அரசை அமைத்தது பாஜக. அவர்கள் கையில்தான் பாஜகவின் எதிர்காலமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+