தமிழர்களை உற்று கவனிக்க வைத்த பாஜகவின் வாக்குறுதிகள்.. தமிழ் மொழி வளர்ச்சிக்காக முக்கிய திட்டம்!
டெல்லி: இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் அனைவரும் பெருமை கொள்வோம் எனத் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ் வளச்சிக்காக பாஜகவின் வாக்குறுதிகள்:
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும். தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் உருவாக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்.
2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.
70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்
திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும்.
இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்று திசைகளிலும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும்
புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் தொடங்கப்படும்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications