BJP Manifesto: ஒரே நாடு ஒரே தேர்தல் டூ இலவச ரேஷன்.. வெளியான பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கை
டெல்லி: பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கை 2024 வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் 'சங்கல்ப் பத்ரா' பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பியூஸ் கோயல் இந்த குழுவில் பங்கேற்றனர். 27 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது .
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்:
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்.
மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே மோடியின் கேரண்டி.
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்..
2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்
பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்
மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்
புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம்
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்
காங்கிரஸ் அறிக்கை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. இதையடுத்து கடந்த வாரமே வெளியானது லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
1. பாஜக செய்த முறைகேடுகள் எல்லாம் விசாரிக்கப்படும். பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும். இதனால் விசாரணை ஆணையம் அமைத்து நேர்மையான விசாரணை நடக்கும்.
2. பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படும்.
3. பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும். மாநிலங்களிடம் இதற்காக ஆலோசனை நடத்தப்படும்.
4. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்களிடம் பிடுங்கப்பட்ட நிதிகள் மீண்டும் வழங்கப்படும்.
5. 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6.நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம். மாநிலங்களின் விருப்பப்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7. நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
8. 100 நாள் வேலைத்திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்றுக்கு ரூ.400 என்பது உறுதி செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றம் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் . மாநிலம் வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
9. ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது; தேர்தலில் பழைய முறையே தொடரும். பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும்.
10. மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications