Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில கட்சிகள் குடும்ப நலனுக்காக செயல்படுகின்றன! வாரிசு அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே: மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை ஒரே பாரதம், சிறந்த பாரதத்தை உருவாக்க பாஜக தொடர்ந்து உழைத்து வருவதாக பாஜகவின் 42 வது ஆண்டு நிறுவன தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பாஜகவின் 42 ஆம் ஆண்டு நிறுவன தினம் இன்று அக்கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு பாஜக நிறுவன தினம் முக்கியமானது. அதற்கு 3 காரணங்கள் உள்ளன.

3 காரணங்கள் என்ன?

3 காரணங்கள் என்ன?

ஒன்று, முதல்முறையாக இந்த நாள் 75 வது சுதந்திர தினத்தோடு வருகிறது. இரண்டாவது, இந்த ஆண்டு சர்வதேச சூழல் மாற்றமடைந்து இருக்கிறது. மூன்றாவது, கடந்த சில வாரங்களுக்கு முன் 4 மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று டபுள் எஞ்சின் அரசுகள் அமைந்தது.

இது நவராத்திரியின் 5 வது நாள். இந்த நன்னாளில் நாம் அன்னை ஸ்கந்த்மாதாவை வணங்க வேண்டும். அன்னை ஸ்கந்த்மாதா தாமரை இருக்கையில் அமர்ந்து தாமரை மலர்களை தனது இருகரங்களில் ஏந்தி இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஒரே இந்தியா, சிறந்த இந்தியா

ஒரே இந்தியா, சிறந்த இந்தியா

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை ஒரே பாரதம், சிறந்த பாரதத்தை உருவாக்க பாஜக தொடர்ந்து உழைத்து வருகிறது. இன்று இந்தியா சர்வதேச சமூகத்தை எந்த அச்சமும், நெருக்கடியும் இன்று அணுகிக் கொண்டு இருக்கிறது. இன்றைய இந்தியா தனது நலன்களில் உறுதியாக நிற்கிறது. உலகமே இரண்டு எதிர் அணிகளாக பிரிந்து நின்றாலும், இந்தியா மனிதநேயத்துக்காக உறுதியாக குரல் கொடுக்கும்.

ரூ.3 லட்சம் கோடி ஏற்றுமதி

ரூ.3 லட்சம் கோடி ஏற்றுமதி

நமது அரசாங்கம் தேசிய நலனுக்காக உழைத்து வருகிறது. இன்று நமது நாட்டிற்கு என தனி கொள்கைகள் உள்ளன. இன்று இந்தியா முடிவெடுக்கக் கூடிய இடத்தில் இருப்பது மட்டுமின்றி அந்த முடிவை செயல்படுத்தும் அளவுக்கு மாறி இருக்கிறது. இன்று நாம் இலக்குக்களை நிர்ணயித்து, அவற்றை நிறைவு செய்தும் வருகிறோம்.

ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டி இருக்கிறது. இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும் இந்தியா இத்தகைய மிகப்பெரும் இலக்கை அடைந்துள்ளது.

ஏழைகளுக்கான இந்தியா

ஏழைகளுக்கான இந்தியா

ஒட்டுமொத்த உலகமும் தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கினோம். 100 ஆண்டுகளில் இல்லாத இந்த மிகப்பெரிய நெருக்கடி காலத்தில் மத்திய அரசு ஏழைகள் பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காக ரூ.3.5 லட்சம் கோடியை செலவழித்து இருக்கிறது.

குடும்ப அரசியலுக்கு எதிரான ஒரே கட்சி பாஜக

குடும்ப அரசியலுக்கு எதிரான ஒரே கட்சி பாஜக

சில கட்சிகள் சில பத்து ஆண்டுகளாக வாங்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தநிலையில், பாஜக அதை தகர்த்து இருக்கிறது. குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் வாக்குறுதிகளை வழங்குவதும், ஏற்றுத்தாழ்வையும் ஊழலையும் வளர்ப்பதும் வாக்கு வங்கி அரசியலின் பாதகமான நிலையாகும். இதுகுறித்து பாஜக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இளைஞர்களை முன்னேற விட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் துரோகம் இழைப்பார்கள். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் ஒரே கட்சி பாஜக என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்." என்றார்.

இரு வகை அரசியல்கள்

இரு வகை அரசியல்கள்

இரண்டு வகையான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று குடும்பத்தின் மீதான அன்பு, மற்றொன்று தேசத்தின் மீதான அன்பு. வெவ்வேறு மாநிலங்களில் சில அரசியல் கட்சிகள் தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றன. அவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் அரசியல் செய்து கொண்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்ப அரசியல் என்ற அடிப்படையில்தான் இணைக்கப்பட்டுள்ளனர்
குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இளைஞர்களை முன்னேற விட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் துரோகம் இழைப்பார்கள். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் ஒரே கட்சி பாஜக என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+