தேர்தல் நன்கொடை.. ரூ 3,355 கோடியுடன் பாஜக தான் டாப்.. காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வளவு தெரியுமா
டெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாகத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையில் சுமார் 76%, அதாவது 3,355 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே சென்றுள்ளது.
இந்தியாவில் தனி நபர்கள் தொடங்கி கார்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பும் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கும். தேர்தல் காலங்களில் இதுபோல நன்கொடை அளிப்பது பல மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த தகவல்களை என்டிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாஜகவுக்கு அதிகம்
மக்களவை தேர்தல் நடைபெற்ற கடந்த 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் பாண்டுகள் மூலம் மொத்தம் 3,355 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 2,555 கோடி ரூபாயை பாஜக மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளில் 76% பாஜகவிற்கே சென்றுள்ளது. மேலும், இது அதற்கு முந்தைய ஆண்டு தேர்தல் பாண்டுகள் மூலம் பாஜக பெற்ற 1450 கோடி ரூபாயைவிட 75% அதிகமாகும்.

காங்கிரஸுக்கு சரிவு
அதேநேரம், மற்றொரு முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸுக்கு தேர்தல் பாண்டுகள் மூலம் கிடைக்கும் நன்கொடை 17% வரை குறைந்துள்ளது. கடந்த 2018-19இல் 383 கோடி ரூபாயைத் தேர்தல் பாண்டுகள் மூலம் காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், 2019-20ஆம் நிதியாண்டில் இது 318 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையில் இது 9% ஆகும்.

திமுகவுக்கு எவ்வளவு
இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ 100.46 கோடி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ 29.25 கோடி, சிவசேனா ரூ 41 கோடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ 2.5 கோடி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ரூ 18 கோடியைத் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளன. அதேபோல திமுக ரூ 45 கோடியைத் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

தேர்தல் பாண்டுகள்
இந்தியாவில் விரும்பும் அரசியல் கட்சிக்கு ஒருவர் பல்வேறு முறைகளில் நன்கொடை அளிக்கலாம். அதில் தேர்தல் பாண்டுகள் மூலம் ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் போது யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை வெளியிட வேண்டியது கட்டாயம், ஆனால் யாருக்கு அளிக்கிறார்கள், அதாவது எந்த அரசியல் கட்சி அந்த நிதியைப் பெறுகிறது என்பதை வெயிட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் இந்த தேர்தல் பாண்டுகள் முறை அமலுக்கு வந்ததில் இருந்து பாஜகவே அதிகளவில் நன்கொடை பெற்றுள்ளது. அதேபோல பாஜக தவிர மற்ற கட்சிகளின் நன்கொடையும் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications