பீகாரில் பீதியில் பாஜக..அரசியலில் களமிறங்கும் நிதிஷ்குமார் மகன்.. கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகல்?
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியூ) தலைவராகக் கூடும் என வெளியாகி இருக்கும் செய்திகள் பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது. அதேநேரத்தில் நிஷாந்த் குமார், ஜேடியூ தலைவரானால்தான் பாஜகவிடம் இருந்து அந்த கட்சியை காப்பாற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வரவேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தரும் முக்கிய கட்சிகளில் ஜேடியூவும் ஒன்று. இதனால் பீகாரில் ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் என பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் நிலையான நிலைப்பாடுகளை எடுக்காதவர் என்பதால் பாஜகவும் அச்சத்தில்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஜேடியூ தலைவராகக் கூடும்; பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் நிஷாந்த் குமார் களமிறங்குவார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது தொடர்பாக லாலுவின் ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், நிஷாந்த் குமார் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில், சரத் யாதவ் உருவாக்கிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக கபளீகரம் செய்துவிட்டது. ஜேடியூவின் தலைவரான நிதிஷ்குமாரின் உடல்நிலை குறித்து பாஜக கூட்டணி கட்சிகளே கேள்வி எழுப்புகின்றன. பாஜகவின் பிடியில் இருந்து ஜேடியூவை மீட்க வேண்டும் எனில் நிஷாந்த் குமார் வருகைதான் சரியானதாக இருக்கும் என கொளுத்திப் போட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், பீகாரில் நிஷாந்த் குமார் வருகை புதிய அரசியல் அத்தியாயமாக இருக்கக் கூடும்; லாலுவின் மகன் தேஜஸ்வியும் நிதிஷ்குமார் மகன் நிஷாந்தும் கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகும். பீகார் அரசியலைப் பொறுத்தவரையில் எதுவும் நடக்கலாம் என்பதால்தான் பாஜக மிகப் பெரும் அச்சத்தில் இருக்கின்றன என்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications