‘நீங்க ஊதவே வேண்டாம்’ விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து.. கங்கனா ரனாவத்தை கண்டித்த பாஜக
டெல்லி: பிரிக்கவே முடியாத விஷயத்தில் கங்கனா ரனாவத்தும், சர்ச்சையும் ஆழமாக இணைந்துள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கங்கனா தெரிவித்த கருத்துக்கு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தமுறை அவரை பாஜக தலைவர்களே கண்டித்துள்ளனர்.
பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு சர்ச்சைகள் புதிது இல்லை. எம்.பி ஆவதற்கு முன்பும் சரி, எம்.பி ஆனதற்கு பிறகும் சரி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த வாரம் காங்கிரஸ் ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரித்து படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு, "பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை" என்று கூறியிருந்தார்.

அது போன வாரம். இது இந்த வாரம் என்பது போல புதிய சர்ச்சைகளுடன் இறங்கியுள்ளார். கங்கனா பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் சண்டிகர் விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தார். இருந்தபோதும் கங்கனா திருந்தவில்லை.
பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதுகுறித்து கங்கனா ரனாவத் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், "பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக மத்திய அரசும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் வைத்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். பஞ்சாப்பில் நடைபெற்ற அதே சூழ்நிலை இங்கும் நடந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து இதற்கான சதித்திட்டம் நடந்தன. நாடு யாரின் கைகளில் சென்றாலும் அதைப்பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த நாடு அறியாது. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது." என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவினரே அவரைக் கண்டிக்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக பஞ்சாப் மாநில பாஜக மூத்தத் தலைவர் ஹர்ஜித் கரேவல் கங்கனாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ஹர்ஜித், "விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் பேச வேண்டிய அவசியமே இல்லை. கங்கனா பேசியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் எப்போதும் விவசாயிகளின் நண்பர்களாக உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள் போன்ற பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர். அதைத்தான் கங்கனா ரனாவத்தின் கருத்தும் பிரதிபலிக்கிறது. மதம், விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கங்கனா கருத்து சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது." என்று கூறியுள்ளார்.
இதேபோல விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கங்கனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications