2 ஆண்டுகள்- 8 மாநிலங்கள், 218 இடைத்தேர்தல்களில் தோல்வி...பீகாரில் என்ன ஆகுமோ? பதற்றத்தில் பாஜக
டெல்லி: 2 ஆண்டுகளில் மட்டும் 8 மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது; மேலும் 218 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில் பீகார் முடிவுகளை பெரும் பதற்றத்துடன் பாஜக எதிர்கொண்டிருக்கிறது.
Recommended Video
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் பாஜக இதுவரை தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இல்லை.
வட இந்தியாவில் பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியாத ஒரே மாநிலம் பீகார்தான். பீகாரில் எப்படியும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாக வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது.

8 தேர்தல்களில் தோல்வி
பாஜகவைப் பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளில் 8 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. 2018-ல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது.

ஆட்சி கவிழ்ப்புகள்
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது பாஜக. கர்நாடகாவிலும் தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லை. அங்கு குமாரசாமி ஆட்சியை கவிழ்த்துதான் ஆட்சியில் உட்கார்ந்தது பாஜக. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்த்துதான் ஆட்சியில் இருக்கிறது பாஜக.

சிவசேனா எஸ்கேப்
ஒடிஷா, மகாராஷ்டிரா தேர்தல்களிலும் பாஜகவால் வெல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை பாஜக இழந்ததுதான் மிச்சம். மேலும் 2 ஆண்டுகளில் 218 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றிருக்கிறது.

பீகார் எக்ஸிட் போல்
இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள், ஜேடியூ-பாஜக அணி ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் கூறவில்லை. தொங்கு சட்டசபை அமையலாம் அல்லது ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் ஆட்சி அமையலாம் என்றுதான் எக்ஸிட் போல் முடிவுகள் கூறி இருக்கின்றன.

பீகார் என்னவாகுமோ?
இப்பின்னணியில் பீகாரில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் தேர்தல் முடிவுகளை பெரும் பதற்றத்துடன் பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications