விவசாயிகள் படுகொலை: 'கிரிஸ்டல் கிளியராக' வீடியோ இருக்குதே.. நீதி கேட்கும் பாஜக எம்.பி. வருண் காந்தி
டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் ஜீப் ஏற்றி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட புதிய வீடியோவை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) எம்.பி.வருண் காந்தி.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி களத்தில் இறங்கி நீதி கேட்டு வருகின்றனர். லக்கிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா முதலில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
அப்போது, போலீசாரின் நடவடிக்கைகளை மிக கடுமையாக பிரியங்கா காந்தி விமர்சித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாட்டி இந்திரா காந்தி அம்மையாரைப் போல துணிவுடன் பிரியங்கா செயல்படுவதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ராகுல் தர்ணா
பின்னர் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி ஆகியோருடன் ராகுல் காந்தி லக்னோ சென்றார். லக்னோ விமான நிலையத்தில் போலீசார் கெடுபிடிகளை காட்டியதால் ராகுல் ஆத்திரமடைந்தார். தங்களுடைய வாகனத்தில்தான் ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைக் கண்டித்து லக்னோ விமான நிலையத்திலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை ஆரத் தழுவி பிரியங்காவும் ராகுல் காந்தியும் ஆறுதல் கூறும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
வருண் காந்தி ஆதரவு
இதனிடையே நேரு குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான வருண் காந்தி லக்கிம்பூர் படுகொலைகளுக்கு தொடர்ந்து நீதி கோரி வருகிறார். வருண் காந்தியைப் பொறுத்தவரையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். இதனால் பாஜக மேலிடமும் வருண் காந்தி மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

வருண் காந்தி வேதனை
ஆனாலும் கடந்த சில நாட்களாக லக்கிம்பூர் படுகொலைக்கு எதிராக பாஜகவில் இருந்து கொண்டே குரல் கொடுத்து வருகிறார் வருண் காந்தி. லக்கிம்பூரில் ஜீப் ஏற்றி விவசாயிகள் படுகொலை செய்யப்படும் தெளிவற்ற காட்சிகளுடனான வீடியோ முதலில் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் வருண் காந்தி. அத்துடன் இந்த சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்குகிறது எனவும் வேதனை தெரிவித்திருந்தார்.
Recommended Video

நீதி கேட்கும் வருண்காந்தி
தற்போது லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பான புதிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை செய்துவிட்டு வாகனங்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் தெளிவாகவே பதிவாகி இருக்கின்றன. இந்த வீடியோவையும் பகிர்ந்துள்ள வருண் காந்தி, தெள்ளத் தெளிவாக -கிரிஸ்டல் கிளியராக விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications