டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துத்துவா, ராமர் கோயில்... அரைத்த மாவையே அரைத்த பாஜக.. விளைவு மோடி அலை ஓய்ந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக?- வீடியோ

    டெல்லி: எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் மாநில பிரச்சினைகளை அறிந்து கொண்டு தேர்தல் பிரசாரங்களில் பேசினாலும் மட்டுமே எடுப்படும் என்பதும் அரைத்த மாவையே எல்லா இடங்களிலும் அரைத்தால் அதன் விளைவு அக்கட்சியே காணாமல் போக நேரிடும் என்பது நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் இருந்து பாஜக கற்றுக் கொள்ள வேண்டும்.

    ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களில் பாஜக தலைத்தூக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் பாஜக வகுத்த வியூகம் என்றே கூறப்படுகிறது.

    ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய 3 இடங்களில் ஓரளவு பரவாயில்லை. ஆனால் தெலுங்கானாவிலும் மிசோரமிலும் பாஜக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த 5 மாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொண்ட அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத்தை தவிர மற்றவைகளில் சரியாக வியூகம் வகுக்கவில்லை என்றே தெரிகிறது.

    கடைசி நேரத்தில்

    கடைசி நேரத்தில்

    கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகளின் போது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியில் அமித்ஷாவுக்கு முழு பங்கு இருந்ததால் அவர் தவறான அணுகுமுறையை எடுக்க மாட்டார் என்பது மோடியின் நம்பிக்கை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கடைசி நேரத்தில் எப்படியோ பிரசாரம் மேற்கொண்ட நிலையிலும் எதுவும் கைகொடுக்கவில்லை.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    கடந்த 2013-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக மற்ற கட்சிகளில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறையும் அதே யுத்தியை கையாண்டது. ஆனால் விளைவு பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அதிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து கொண்டனர்.

    தோற்கடித்த

    தோற்கடித்த

    காங்கிரஸ் கட்சியிலும் குரூபிசங்கள் உள்ளன. ஆனால் பாஜக கூடாரத்தில் அதிருப்தியாளர்கள், பாஜகவை விட்டு விலகியவர்களை அக்கட்சி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நிலைமை அமித்ஷாவின் கையை மீறி சென்றுவிட்டது. சட்டசபை தேர்தல்களில் சம்பந்தமே இல்லாத பிரச்சினைகளை பேசியதுதான் பாஜக தோற்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஆயுதம் இந்துத்துவா

    ஆயுதம் இந்துத்துவா

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, வங்கதேச ஆக்கிரமிப்பாளர்களை ஒவ்வொருவராக விரட்டுவது, சத்தீஸ்கரில் பைப் லைன் பதிக்காதது ஆகியவையே எல்லா இந்த 5 மாநில தேர்தல்களில் பிரதானமாக பேசப்பட்டது. பிரதமர் மோடி எப்போதும் பிரசார கூட்டங்கள் வெற்றி குறித்தே பேசுவார். ஆனால் இந்த முறை சங்க் பரிவார் மற்றும் இதர அமைப்புகளை திருப்திப்படுத்த அமித்ஷா கையில் எடுத்த ஆயுதம் இந்துத்துவா. இவற்றை கேட்டு மக்கள் ரொம்ப காலம் ஆகிவிட்டது.

    எதிர்காலம்

    எதிர்காலம்

    அமித்ஷா மேலோட்டமாக பிரசாரம் செய்தது நாடு முழுவதும் மோடி அலை அடித்து கொண்டு சென்றுவிட்டது. இதுவே பாஜகவின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது. இனியாவது பாஜக அரைத்த மாவை அரைப்பதை விட்டுவிட்டு புதிய வியூகங்கங்களை கையில் எடுத்தால் மட்டுமே எதிர்காலம் உண்டு.

    English summary
    Shah’s strategy to beat anti-incumbency against the BJP in states with Hindutva didn’t work in the Hindi heartland.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X