அதானி மீதான அமெரிக்கா குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு, சத்தீஸ்கர்.. ராகுலுக்கு தெரியுமா? பாஜக கேள்வி
டெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் வழக்கில் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருப்பது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு தெரியுமா? என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்குதான் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பாஜக இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.
அதானி குழுமம், சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டங்களுக்காக மத்திய அரசின் SECI - Solar Energy Corporation of India உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த SECI நிறுவனத்துடன் பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்கள் ஒப்பந்தங்கல் செய்ய வலியுறுத்தி லஞ்சம் கொடுத்தது அதானி குழுமம் என்பது அமெரிக்காவின் புகார். மாநில அரசுகள் SECI உடன் செய்திருக்கும் ஒப்பந்தங்களை வைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ20,000 கோடி முதலீடு பெற்றார் அதானி; ஆனால் அதானி தாம் லஞ்சம் கொடுத்து மாநிலங்கள் மூலமாக ஒப்பந்தங்களைப் பெற்றதை மறைத்து இந்த முதலீடுகளைப் பெற்றார் என்பது அமெரிக்காவின் வழக்கு.

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இதனால் பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் மிக மோசமான சரிவை இன்று எதிர்கொண்டன. ஆனால் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானியை உடனே கைது செய்ய வேண்டும். பிரதமர் மோடியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அதானி. இதனால்தான் முறைகேடுகள் செய்தாலும் சுதந்திரமாகவே அதானி வலம் வருகிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பட்ரா இது தொடர்பாக கூறுகையில், அதானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளுகிற தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள்தான். இதனை ராகுல் காந்தி புரிந்து கொண்டாரா? பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அதானி விவகாரத்தில் குற்றம்சாட்ட 4 மாநிலங்களிலுமே அப்போது அதாவது 2021-22-ல் பாஜக ஆட்சி செய்யவில்லை. இத்தனைக்கும் சத்தீஸ்கரிலும் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications