உ.பி, மேற்கு வங்கத்தில் முக்கிய தலைகளுக்கு சீட்.. 10ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 9 வேட்பாளர்களை கொண்ட 10ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என பாஜக வியூகங்களை வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதன் மூலம் நேருவுக்கு பின்னர் 3வது முறையாக பிரதமராக இருந்தவர் என்கிற பெருமை இவருக்கு கிடைக்கும்.

அதுமட்டுமல்லாது, வரும் 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே இதனை கொண்டாட பாஜக நிச்சயம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். எனவே பார்த்து பார்த்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது பாஜக. அந்தவகையில் தற்போது 10வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கம், சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
9 பேரில் 8 பேர் புதிய வேட்பாளர்கள். சண்டிகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தற்போது கிரண் கேர் உள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் சஞ்சய் தண்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசத்தை பொறுத்த அளவில், காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இதில் மெய்ன்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக இருக்கிறது.
நாடு முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து முழங்கி வந்த நிலையில், கருத்துக்கணிப்புகள் இது சாத்தியமில்லை என்று தெரிவிக்கின்றன. எனவே, 370 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக காங்கிரஸ், மாநில கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இதில், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மறுபுறம் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications