பஹல்காம் அட்டாக் பற்றி மோடிக்கு முன்பே தெரியுமா? கார்கே குற்றச்சாட்டால் பாய்ந்து வந்த பாஜக தலைகள்!
டெல்லி: பஹல்காம் தாக்குதல் பற்றி உளவுத்துறை மூலம் 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய நிலையில், அவரது குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது பாஜக. கார்கே, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அற்ப அரசியல் செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கார்கே வைத்த குற்றச்சாட்டு
இநிந்லையில், "பிரதமர் மோடிக்கு, மூன்று நாட்களுக்கு முன்னரே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவது தெரியும். அதன் காரணமாகவே அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தீவிரவாத தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத்துறை பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் விட்டீர்கள். எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவ படை, ராணுவம் இருக்கிறது. இவற்றையெல்லாம் உஷார் படுத்தி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜக கண்டனம்
பஹல்காமில் 26 பேர் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவலை அரசாங்கம் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியது, நமது ஆயுதப் படைகளின் "மன உறுதியைக் குறைக்கும்" முயற்சி என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கார்கேவின் குற்றச்சாட்டுகளை பாஜக செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எப்போதுமே பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதான காரணம் தான். ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு முன்பே பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஊகத்தின் அடிப்படையில்
எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் மோடியின் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது ஊகத்தின் அடிபடையிலானது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்டது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் போதெல்லாம், அக்டோபர் 2023 இல் இஸ்ரேலில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவில் 9/11 ஆக இருந்தாலும் சரி, அந்த விஷயத்தில், இந்திரா அல்லது ராஜீவ் காந்தியின் படுகொலையாக இருந்தாலும் சரி, எப்போதும் பாதுகாப்பு குறைபாடு இருக்கும்.
அற்ப அரசியல்
தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் நூறு சதவீத வெற்றியை அடைய வேண்டும், ஆனால் பயங்கரவாதிகள் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றால் போதும். பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கு நாம் தயாராகி வரும் நேரத்தில் கார்கே இப்படி பேசுவது அவர் அற்ப அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதைக் காட்டுகிறது.
மல்லிகார்ஜுன கார்கே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றைப் பற்றிப் பேசாமல், அதிக முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கார்கே இரட்டை வேடம்
முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து, கார்கே இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். "ஒருபுறம் அவர் நாட்டுடன் நிற்பதாகக் கூறுகிறார். அதேசமயம் நமது நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமரை அவர் விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட ஒரு பொறுப்பற்ற கருத்து வரமுடியாது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது" என பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications